Posts

Showing posts from September, 2019
Image
முகுந்த் நாகராஜன் கவிதை கள் ஒரு சிறு புன்முறுவலைத் தன் அத்தனை கவிதையிலும் ஒளித்து வைத்திருக்கிறார் கவிஞர்.முகுந்த் நாகராஜன். கவிதை முடியும் வரியில் நிச்சயம் அதை கண்டடையச் செய்கிறார். நாமும் புன்னகையோடே அடுத்த கவிதை நோக்கி நகர்கிறோம். குழந்தைகளின் உலகத்தை நிறைய எழுதியிருக்கிறார். எளிய மனிதர்களைத் தன் கவிதைகள் முழுக்கப் பதிவு செய்து உலவ விடுகிறார். சித்தாள் சேலை காயப்போட்ட இடம் இன்று பெருநிறுவன கட்டிட்டத்தின் நியான் போர்டு தொங்குமிடமென்ற கவிதை எதார்த்த உலகத்தின் நேரடிச் சாட்சி. புரியும் கவிதைகளை நவீன கவிதைகளாக நிலைபெறச் செய்திருக்கிறார் என்று ஒரு விமர்சனம் படித்தேன். நூறு சதவித உண்மையென்று அவரின் கவிதைகளைத் தேடித்தேடிப் படிக்கையில் உணர்கிறேன். இத்தனை தாமதமாக அவரை வந்தடைந்ததற்கு வருந்துகிறேன்.
Image
ராஜன் மகள் - பா. வெங்கடேசன் செதுக்கிருக்காங்க ... இழைச்சிருக்காங்க ... நுட்பம் அப்படிங்குற வார்த்தைக்கு இன்னும் என்னென்ன வேறு சொல் இருக்கோ எல்லாம் தகும் இந்த புத்தகத்துக்கு ... நீண்ட வாக்கியங்களால் அமைக்கப்பட்ட பெரிய பத்திகளைக் கொண்ட 4 குறுநாவல்கள் இப்புத்தகத்தின் அடக்கம். ஒவ்வொரு குறுநாவலும் அது எழுதப்பட்டிருக்கும் விதம் குறித்தே மிகுந்த பிரமிப்படையச் செய்கிறது. மிக மிக ஒரு கவனமான வாசிப்பையும் புத்தி ஒருங்கமைப்பையும் கோருகிறது ஒவ்வொரு வரியும். எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியுமென்ற தற்குறி அறிவோடு இக்கதைகளை நான் வாசித்துணர்ந்தேனே தவிர இக்கதைகளில் நிலவும் தத்துவ தளங்களிலும் அறிவார்ந்த ஆய்வுப் பக்கங்களிலும் எழுத்து கோரும் நுண்ணறிவுகளையும் நான் ஊடுருவிச் செல்ல முயலவில்லை சொல்லப்போனால் இயலவில்லை. நிறைவேறாக் காதல்களக் மையப்படுத்தியதான கதைகளான குறு நாவல்களின் சுருக்கக்கதை என்பது ஒன்றிரண்டு குறும்பத்திகளில் சொல்லிவிடக்கூடியதுதான். ஆனால் அதை அவர் சொல்லியிருக்கும் விதம் பிரம்மாண்டம். நின்று நிதானமாக மொழி,கதை மாந்தர்களின் மனம், காலம், கனவு , உரையாடற்களற்ற பத்தி அமைப்பு,நிறுத்
Image
நூலாம்படை - கு.விநாயக மூர்த்தி சுமார் 10-15 வரிகள் ... ஒவ்வொரு வரிக்கும் தனித்தனி அர்த்தம் ... அந்த வரிகளை தனியாப் படிச்சாலும் புரியல... ஒட்டுமொத்தமாகச் சேர்த்தாலும் புரியல ... அந்த பத்தி அமைப்புக்கு ஏதாவது ஒரு புதிய காலத்தைக் குறிக்கும் "த்துவ" அடையாளம் ... அந்த வரிகள எழுதின எழுத்தாளரே வந்து அது என்ன அர்த்தத்தில் எழுதப்பட்டதுன்னு விளக்கம் கொடுத்தாலொழிய இதுக்கு என்ன அர்த்தம்னு விளங்காத அலுப்பு அல்லது விளங்கிக் கொள்ளப் போதிய அறிவின்மை ... இந்த சிக்கல்களை இதுவரைக்குமான உங்கள் கவிதை வாசிப்பனுபவத்தில் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? இந்தத் தொகுப்பு அச்சிக்கல்களைத் தீர்த்து வைத்து சில எளிய மொழியின் கவிதைகளின் மூலம் நம்மை மகிழ்விக்க வந்திருக்கிறது. கவிதையின் பலவகைகளை வாசித்திருக்கிறோம். ஒரு கவிதை அது முடியும் தருவாயில் அதுதான் கொண்டுள்ள ஒரு பேருணர்வை நம் மனதுள் வெடித்துப் பிரிந்து நிறைக்க வேண்டுமென்ற குறைந்தபட்ச வேண்டுதலையே நல்ல கவிதையின் இலக்கணமாய் நான் கொண்டுள்ளேன். அதைச் செய்யாத கவிதைகளை நான் நமக்குத் தான் புத்தியில்லையோ என்று கருதி திரும்பவும் வாசித்துப் பார்க்கிறேன். அ
Image
ராக்கெட் தாதா - கார்ல் மார்க்ஸ் இந்தத் தொகுப்பை ஏன் நிறைய பேர் பரிந்துரை செய்தார்களென்ற விளக்கத்துக்கு சில கதைகளே பதிலாகப் போதுமென்றிருக்குறது. நிழல் என்ற கதையைத்தான் முதலில் படித்தேன். மனதில் மிகவும் பாதிப்பை உண்டாக்கிவிட்டது அந்த ஒரு கதையே. மொத்தத் தொகுப்பின் முழுப்பதமறிய அந்த ஒரு கதையே போதுமாயிருந்தது. கதை முடியும் போது சந்திராவுக்காகவும் இறந்துவிட்ட அவரின் மகனுக்காகவும் கண்ணீர் துளிர்த்திர ுந்தது. சித்திரங்கள் - நாம் இழந்து வரும் அல்லது நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நமக்கு சகஜமாக்கப்பட்டு வரும் குடும்ப உறவின் சிதைவுகளை அத்தனை நிகழ்கால உண்மைகளோடும் உளவியலோடும் கூறுகிறது. பெண்ணின் மீறல்களுக்கு கேள்வி கேட்கும் ஆண் மனம் ஆணின் மீறல்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வியை நம்முள் ஏற்படுத்தி முடிகிறது கதை. சுமை - ஒரு முக்கோணக் காதல் கதை முடிவில் ஒரு பச்சிளங்குழந்தையின் மறைவில் ஒரு மிகப்பெரிய இழப்பையும் குற்றத்தையும் கைக்கொண்டதில் ஒரு ஒழுங்கான வழிக்கு வரும் போது உண்மையான காதல் சிறைக் கம்பிகளுக்கிடையில் துளிர்க்கிறது. கிறக்கம் - சாராயம் குடிப்பதின் சல்லாபப் பக்கங்களை பெரும் நகை
Image
டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும்                                                    ஜி. நாகராஜன் "மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" என்ற ஜி. நாகராஜன் அவர்களின் வாக்கு எத்தனை அனுபவப்பூர்வமானது மற்றும் அர்த்தப்பூர்வமானது என்பதை இந்த கதைகள் நிருபிக்கிறது. இந்தத் தொகுப்பிலிருக்கும் அத்தனை கதைகளிலும் குறைந்தது ஒரு பெண் இருக்கிறாள். அவள் சமூகம் தவறெனச் சுட்டும் ஒரு தொழிலை அதே சமூகம் செய்ய நிர்பந்தப்பந்திக்கிறது. புறத்தே நின்று அவளைக் காரி உமிழும் சமூகம் அகத்தே அவள் காலடியில் பணிகிறது. எப்போதும் தம்  இச்சை தீர்க்க அவளைக் குற்றவாளியாக்கிக் குளிர்காய்கிறது சமூகம். ஒரு பெண் மாசுறுவதாகச் சமூகம் கருதும் அத்தனை சூழ்நிலைகளிலும் அதிலுள்ள ஆணின் பங்கை கவனியாது திட்டமிட்டே கடக்கும் போக்கைக்குறித்து பதிவு செய்திருக்கிறார் நாகராஜன். இது போக விளிம்பு நிலை என்பது யாரால் உருவாக்கப்படுகிறது. அதன் பின்னணி என்ன ? என்பதையும் அதற்காக இங்கே பலியிடப்படுபவர்களின் வாழ்க்கை, ஏழ்மையும் மூடமும் ஒரு சேரக்கொண்ட சமூகத்தின் சில அங்கத்தினருக்கு எதிராக அரசும் அதிகாரமும் செல்வமும் சேர்ந்துகொ
Image
அபோர்ஷனில் நழுவிய காரிகை  -  ஷக்தி மருத்துவர் கவிஞரானால் ...  ❤️ தொகுப்பு முழுக்க மருத்துவரின் சமூகக் கோபமும் சக மனித அன்பும் கவிதையெனும் இலக்கிய வாசல் வழி இயல்பாய் வெளிப்படுகிறது. நவீனம்,வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்த பெரு நிறுவனங்களின் தொழிற்போட்டிகளில் திளைக்கும் பேராசைப் பசி மனிதனின் தொழில்,கேளிக்கை என்று நீண்டு கடைசியாக உயிர்காக்கும் மருத்துவத்தைத் தன் முழுவாய்க்குமான மொத்த உணவாக மாற்றுகிற அவலத்தைத் தன் கையறு நிலையிலிருந்து பதிவு செய்கிறார் கவிஞர். படிக்கப் படிக்கப் பதைக்கும் மனித நோய்மைகளின் விவரிப்புகள், அதுக்கான மருத்துவத் தேவைகளின் போதாமை, அரசின் அலட்சியம், மக்களின் விழிப்புணர்வின்மை மற்றும் ஏழ்மை,உயிரைத் தொழில்முதலாய் வைத்து லாபம் பார்க்க நினைக்கும் நிறுவனக் கொடுமைகள் என நீளும் மருத்துவ உலகின் நிழலுலகக் காட்சிகளை துறைசார் அறிவோடு நிகழ்த்தும் கவிதைக் கணங்கள் நிலையாமைகளின் காணொளியாய் விரிகிறது மனதில். ஒவ்வொரு கவிதைக்குள்ளும் மனிதமும் அன்பும் தமிழும் நிறையும் இந்தத் தொகுப்பு நிச்சயம் ஒரு மாற்று வாசிப்பனுபவத்தைக் கொடுக்கும். ஜெயமோகன் அவர்களின் வாக்கு போல
Image
கானகன் - லஷ்மி சரவணக்குமார். காடென்பது ஒரு பேருயிர். சின்ன சின்ன உயிர்களின் தொகுப்பே காடு. அச்சின்ன உயிர்களின் வாழ்வுக்குத் துன்பம் நேரும் போது பேருயிர் பெரும் அழிவை நோக்கிப் பயணப்படும். காட்டுக்குள் இருந்துகொண்டே காட்டை உயிராக நினைத்துக் கொண்டே வாழும் மனிதர்கள் சுயநலமும் பேராசையும் கொள்கிற தருணங்களில் தமக்கு எல்லாமுமாயிருந்த காட்டையே பலி கேட்கிறார்கள்.பதிலுக்குக் காடு அவர்களைப் பலி கேட்கிறது. த த்தமது வாழ்வை வேண்டிய இந்த எதிரெதிர் போராட்டமே நாவல். சுகவாழ்வின் முன்னால் எதுவும் பெரிதில்லையென்ற நினைப்போடிருக்கும் தங்கப்பனை இரக்கமற்ற வேட்டைக்காரன் நிலைக்கும் வாழ்வதற்கும் அறமும் நெறியும் இருக்கிறதென்பதை வாழ்வனுபவங்களால் பெறும் சடையனையும் அவன் வாரிசு வாசியையும் காட்டை நேசிக்கும் மக்களின் பிரதிநிதிகளாக நிறுத்தி சிறுபெரு விலங்குகளும் சிறுபெரு தாவரங்களும் நிறைந்த காட்டுக்குள் நடக்கும் அத்தனை அத்துமீறல்களையும் அழித்தொழிப்புகளையும் எளிய மனிதர்களின் சுகதுக்கங்களை முன்னிறுத்திக் காதலோடும் காமத்தோடும் பேசுகிறது. இன்னும் கொஞ்சம் டீடெயிலிங் இருந்திருக்கலாமோ என்ற தோணல் நாவலின் முதல் அத்தியாயம் முத
Image
பொன்னி - ஷான் கருப்புசாமி படிக்கச் சுவாரசியமான களமும் கதைசொல்லும் முறையும் எளிய மொழியும் கொண்ட ஒரு நாவல். என் வாசிப்பு அறிவின் வரையில் 1.தங்கம் பற்றிய தகவல்கள் கொண்ட முதல் நாவல் 2.சுரங்கம்+ அதன் அமைப்பு + அதன் தொழிலாளர் வாழ்வியல் ஆகியவற்றைப் பதிவு செய்த முதல் நாவல். இரண்டாயிரம் ஆண்டுகளாய் தங்கம் விளையும் கோலாரில் இரண்டாயிரம் வருடமாய் ஒரு சத்தியத்துக்காய்ப் பாதுகாத்து வரும் தங்கச்சுனையைப் பற்றிய ரகசிய வரலாற்றையும் அது சார்ந்தோரின் வாழ்க்கையையும் இரணிய காலத்திலிருந்து இன்டெர்நெட் காலம் வரை கோர்த்துக் கொடுத்த கதை. முதல் அத்தியாயத்தில் சோழர் காலத்தில் சுற்ற ஆரம்பிக்கும் கதைராட்டினம் கடைசி அத்தியாயத்தின் கடைசிப் பத்தியில் கதையின் நாயகி பொன்னியோடு விமானம்விட்டுத்தாவி நம்மையும் காற்றில் பறக்கச் செய்து விட்டு ஓய்கிறது. அத்தனை வேகம், அத்தனை திருப்பம். சுரங்கத் தொழில் என்பதன் கொடுமையான பிண்ணனியை நாவல் முழுக்கப் பேசியிருக்கிறார் ஆசிரியர். யாரோ செழித்துக் கொழிக்க தம் உயிரையே பணயம் வைத்துப் பணியெடுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பல்லாண்டுகளாய்ப் பேசாத வரலாறுகள் அவை. ஒரு சின்ன அன்பும், பரிவும்
Image
இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன். கதைகளின் மாயக் குடுவை. ஔரங்கசீப்பின் இறுதி நாட்களில் நோய்மையால் ஏற்படும் தளர்வைக் கண்டு அவரே அச்சமுறுவதில் ஆரம்பிக்கும் கதை அவரின் வாரிசுகள், அவரின் மறைவுக்குப் பிறகாக நடத்தும் அதிகாரப் பசிக்கான சண்டைகள், அஜ்யா என்ற ஒருவர் அரசருக்கு நெருக்கமான பணியாளின் வாழ்வு அரசரின் ரகசியங்களறிந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கொடுமைக்குள்ளாக்கித் தீர்க்கப்படுவதும்,தூமகேது என்ற சாதாரணண ின் வாழ்வு ஒரு புத்தியில்லா மன்னனின் கேடுகெட்ட ஆட்சிமுறையால் பாதிக்கப்பட்டு, அனாதையாக்கப்பட்டு, கடைசி காலம் வரை பல சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டு குடும்பத்தைப் பிரிந்து வாடும் துர் நிலைக்குத் தள்ளப்படுவதும், பிஷாடன், சனத், சிகிரியர், குலாபி, பறவை மனிதன், என்றோர் பலரின் வாழ்வென புரட்ட புரட்ட பக்கங்கள் தோறும் கதைகள் விரிந்துகொண்டே இருக்கிறது. சிறியதும் பெரியதுமான அத்தனை கதைகள் நிறைந்துள்ளது புத்தகம் முழுவதும். பல கிளைக்கதைகளை ஒரு முக்கியக் கதைக்குப் பக்க பலமாக அடுக்கிக் கொண்டே போகிறார் ஆசிரியர். வாசிப்பின் போது இது யாருடைய கதை என்ற குவியத்தில் நிலைபெறாமல் போகும் அயர்ச்சியைத் தாண்டி இது உலகம் முழுக
Image
பனி குல்லா -   கவிதைக்காரன் இளங்கோ   திரு. எஸ். ரா. அவர்களின் ஒரு உரையில் அவரின் பாராட்டைக் கேட்டு உங்களின் பனி குல்லா தொகுப்பை இன்று கோவை புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்து வாசித்தேன். ஒரே அமர்வில் 9 கதைகளையும் வாசித்து விட்டேன். புதித கதைக்களன்கள். அதிலும் நவீனம் மேம்பட்ட உரையாடல்கள். அத்தனை கதைகளும் நேர்த்தியாகவும் ஆழமாகவும் இருந்தது. இன்றைய காலகட்டத்தைப் பிரதிபலிப்பதான கதைகளத் தேர்வு அத்தனை கதைகளையும் இன்றைய நெஞ்சோடு பொருத்திப் பார்க்கச் செய்கிறது. ஒரு சில கதைகளில் கொஞ்சம் நகர்ந்தால் சுஜாதாவிடம் போய்ச்சேர்ந்து விடும் மொழி மிகவும் கவனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் முள் மற்றும் தொட்டிச் செடி. 1.தையல் - கதையில் முடிவில் மூன்று பெண்களுக்குமாக சூழ்நிலைகள் தவிர்த்த ஒரு நெருங்கிய ஒரு தொடர்பு இருக்குமென நம்பி ஏமாந்தேன். (ஒருவேளை இருந்தால் என் அறிவுக்கு எட்டவில்லை என சமாதானப் படுகிறேன்.) 2.தொட்டிச் செடி - இரண்டு பெண்களுக்குள்ளான நட்பை இத்தனை அழகான ஊடுருவியிருக்கிறீர்கள். அது அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது. பெண் தோழிகளுக்குள்ளான ஒரு நெருக்கம் அது ம
Image
வாசிப்பதோடு சில கிறுக்குத்தனங்களும் ... திரையில் நாவலாசிரியர் ஜெ.பிரான்சிஸ் கிருபா  ❤️
Image
மாயக்குதிரை - தமிழ் நதி. இப்படியாக இந்த ஞாயிறும் என் ஞாபகக் கலனில் நல்ல பொழுதாக சேகரமாகியது. 10 கதைகளில் ஈழத்தில் போர்க்காலத்தில் உடைந்த பல மனதுகளும் தொலைந்த பல உறவுகளும் சிதைந்த பல வாழ்வுமே விரவிக் கிடக்கிறது. மனக்கோலம் கதை பெரிதாக அதிரச் செய்தது. யுத்தக்காலத்தில் பெண்களடைந்த கொடூரம் ராசாத்தி அக்காவின் கத்தலாக காதுக்குள் இன்னும் ஒலிக்கிறது. நித்திலாவின் புத்தகங்கள் என்னை இந்தப் புத்தகம் வாசிக்கும் போதும் திட்டிக் கொண்டே சாப்பாடு பறிமாறிக்கொடுக்கும் என் தாயை நினைவுபடுத்தியது. தாழம்பூ,தோற்றப் பிழை கதைகள் மாயத்தைக் காட்டின. குழப்பமான மன நிலையிலிருந்து மீளும் அல்லது மீண்டுவிட்ட மனதின் நிலையாமைகளைப் பேசியிருக்கிறது. கடன் கதை என் நிகழ்காலத்தில் நான் சுதாரிக்க வேண்டிய அச்சத்தையும் முன்னறிவிப்பையும் கொடுத்திருக்கிறது. மாயக்குதிரை கதை ஏதாவது மாயச் சுழலில் தம்மைப் பலிகொடுத்துவிட்டு மீண்டுவர இயலாமல் சுழலும் அநேக மனதுகளின் துக்கக் கதைகளின் பிரிதிநிதித்துவம் பெறுகிறது. கறுப்பன் பூனைக்குட்டி என் நேசக்கைகளுக்குள் பத்திரப்படுத்தப்படும். தொகுப்பில் எனக்குப் பிடித்ததான மலைகள் இடம் பெயர்வதில்லை கதை
Image
ஒரு சிறந்த சிறுகதையின் கூறுகள்.(என்னளவில்) ... 1. ஒரு கதையின் சிறந்த பாகத்தைச் சுருக்கிச் சிறுகதையாக்கலாம். 2. ஒரு சிறுகதைக்குள் கட்டாயம் ஒருகதை இருக்க வேண்டும். 3. அந்தக் கதை குறுகிய எல்லைக்குள்ளாகவே கதைத் தொடக்கம், வளர்ச்சி, திருப்பம், முன் முடிவு ,முடிவு என்ற கூரிய விதிகளுக்கு ஓரளவாது கட்டுப்பட வேண்டும். 4.அந்தக் கதை அதற்கு முன்னுள்ள கதையையும் பின்னுள்ள கதையையும் யோசிக்க வைத்தே தீர வேண்டும். 5.பல கதாபாத்திரங்கள், நிறைய தகவல்கள் நிறைந்ததாக இல்லாமலிருந்தால் வாசிக்க சுவாரஸ்யமும் எளிமையுமாக இருக்கும். *** வருவதற்கு முன்பிருந்த வெயில் - கார்ல் மார்க்ஸ் முன்கூட்டிக் கணிக்க முடியா வாழ்வின் சூழலுக்கேற்ப சமாதனம் தேடும் மனங்களை ஊடறுத்துப் பார்க்கும் கதைகளைக் கொண்ட சிறந்த தொகுப்பென்று இதைச் சொல்வது என் மிகச்சிறிய வாசக அறிவுப் பார்வையே ஆகும். 10 கதைகள் , ஒவ்வொன்றும் ஒரு வகை. ஒவ்வொரு கதையும் ஒரு உள்ளூரும் துயரத்தை கண்ணீர் பிசுபிசுக்கும் உயிர்ப்போடு பேசுகிறது. உழைப்பிற்குப் பணயம் வைக்கும் உடல் வலியும், பொருந்தா உறவின் பிரிவும், வறுமையிலும் கைவிடாத பிள்ளையின் கல்விப் பாசமும் , இதயக் கூடு நிறைத
Image
கசங்கல் பிரதி  -  யூமா வாசுகி தமிழின் தன்னிகரகற்ற கவியோடு சில நாட்கள். என் வாழ்வில் நினைத்து நினைத்துச் சுகிக்குமளவுக்கான உன்னதக் கவிதைப் பொழுதுகள். மனம் முத்திய நிலை பித்தென்று சொல்வார்களே அதுவும் மூத்து இதில் கவிதையாகிருக்கிறது. இத்தொகுப்பின் வாசிப்பை ஒரு பேரனுபவம் என்றுதான் என்னறிவிற்கு இதை வரையறுக்க முடிகிறது. கைவர மறுக்கும் வாழ்வின் நுண்ணிய தளங்களையும் ஊடறுத்துக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதைகள். மூன்றாம் பாகமான காதல் உயிர்கொள்ளும் கவிதைகள் பெண்ணீர்ப்பை ஒரு வழிபடல் போல நிகழ்த்திக் காட்டுகிறது. வாசித்து முடித்த நொடியில் உட்சபட்ச மனவெழுச்சியில் நின்று சொல்கிறேன் .. என் வாழ்நாள் முழுமைக்குமான நான் வாசித்ததில் என் விருப்பக் கவிதைத் தொகுப்புகளில் ஒரு தொகுப்பாக இத்தொகுப்பு இருக்கும்.
Image
அம்புயாதனத்துக் காளி -  பிரபு கங்காதரன் ஆனந்தத் தாண்டவம். மங்கையரின் மைவிழியசைவுக்கே மரித்த மனம் மலர்ந்து நிற்கும். இதில் மாகாளி உடல் திறந்திருக்கிறாள். மறுபூமியில் கூட மஞ்சம் மணக்குமென நினைக்கிறேன். காமமே கருவாகி காமமே மொழியாகி காமமே கவிதையாயிருக்கிறது அத்தனை உயிர்ப்போடும் அழகோடும். கூடற்பொழுதுகளின் புணர்ச்சி மகிழ்தலும் நிறையழிதலும் ஒரு தாந்திரீகச் செயல்பாடுபோல் உச்சகட்ட மனநிலையில் உணர்வுபொங்க வெறிகொண்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மிகநுணுக்கமான உடற்கூட்டு விவரணைகளுடனும் தேர்ந்த சொற்களுடனும் காளியென்ற உச்சநிலை எய்திவிட்ட பெண்ணுடல் மேலான காதலும் காமமும் நிறைந்து நிற்கும் தொகுப்பு.
Image
தாழம்பூ - பொன்முகலி நமக்காக எழுதப்பட்ட, நாம் எழுதியிருக்க வேண்டிய என்று நம் மனதொடும் வாழ்வோடும் தொடர்புபடுத்திக் கொள்கிற கவிதைகளை நாம் எப்போதும் வியப்போம் விரும்புவோம். நெஞ்சோடு சேர்த்து வைத்துக் கொள்வோம். அப்படியான கவிதைகள் ஒரு தொகுப்பு முழுக்க இருக்குமாயின் என்ன சொல்வதென்றே தெரியாமல் ஆனந்த அதிர்வில் அசையாமல் நிற்போமே அந்த மனநிலையைத் தான் இந்தத் தொகுப்பு தருகிறது. எளிய மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் வாசகனின் கைபிடித்துக் கொண்டமர்ந்து ஆசை தீரக் காதலின் விருப்பு வெறுப்புகளை பேசுகிறது. இடையே கசியும் கண்ணீரைத் தானே துடைத்துக் கொண்டு வீராப்பும் பேசுகிறது. எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்துகொண்டு இயற்கை உள்ளிட்ட கூட்டு வாழ்வியலின் மாய எதார்த்தத்தைப் பற்றி உரையாடுகிறது. "கொஞ்சம் காலாற நடப்போம் வா ..." எனக்கூட்டிக் கொண்டு போய் நம் தோள்மீது கைபோட்டுக் கொண்டு நிலையாமைகளின் இருள் பக்கங்களை அறிமுகப்படுத்துகிறது. சில சமயம் கால்வலிக்கிறதா என்று கூடக் கேட்காமல் நீள்கவிதைகளாக நீளும் அன்பின் உரையாடல்களில் நாமும் நம் லயித்துப் போய் கதைகேட்க நின்றுவிடுகிறோம். 'கைகொள்ளா' வாழ்வு தரும் வலி
Image
அயல் மகரந்தச் சேர்க்கை -  நேசமித்ரன் முதுமொழி தன் சுளுக்கெடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு கவிதையும் ஒரு புதுத்திறப்பை உண்டாக்குகிறது. எனக்குத்தான் இன்னும் பயிற்சி வேண்டுமென நினைக்கிறேன் முழுவதுமாகப் புரிந்துகொண்டு அனுபவிக்க ...
Image
லிலித்தும் ஆதாமும் - நவீனா பெண்ணியம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பெண்ணியம் என்பது "தன் பாலினத்தின் மீதான அன்பும் மற்ற பாலினத்தை மீதான புரிதலும் தான்" என்ற எளிய விளக்கத்தோடு தொகுப்பைத் தொடங்கியிருப்பதே மிகப் பெரிய ஆறுதலையும் வாசிப்பு ஊக்கத்தையும் அளித்தது. 23 தலைப்புகளில் பெண்,பெண்ணியம், பெண் உளவியல், பெண்சார்ந்த குடும்ப,சமூக,பொருளாதாரப் பார்வைகள், விமர்சனங்கள்,அடக்குமுறைகள் , பெண் உடல் குறித ்த தோற்ற மயக்கங்கள்,ஆண்-பெண் சகோதர உறவில்,திருமண பந்தத்தில், குழந்தைப் பேற்றில் உருவாகும் உடல்நிலைச் சிக்கல்கள், குழந்தையற்ற பெண்களின் மீது கொண்டவனும் குடும்பமும் சமூகமும் நடத்தும் கூட்டு வன்மங்கள், குழந்தை வளர்ப்பில், குடும்ப பராமரிப்பில், விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து அதில் பயணித்தல்களில்,தகுதிக்கேற் ற பணியைத் தேர்ந்தெடுத்தலில்,பணிக்குப ் போவதில், ஊதிய வேறுபாடுகளில்,சொத்துப் பகிர்வில் நிலவும் உரிமை மீறல்கள் என அனைத்து பாலின சமநிலையற்ற போக்குகள், இயற்கை உட்பட இந்த உலகின் அத்தனையும் பெண்ணுக்கெதிராகாக் காட்டும் கொடூர முகங்கள்,தெய்வ வழிபாடுகளில் பெண்ணுக்குச் சமயங்களின் ஒரவஞ்