Posts

Showing posts from March, 2020
Image
தனியறை மீன்கள் - அய்யனார் விஸ்வநாத் ஒரு கவிதைக்கு அதன் முதல் வாசிப்பு மிக உன்னதம். முதல் வாசிப்பிலேயே புரிந்து கடைசி வரியில் வெடித்து அதன் அர்த்தம் நம் மனம் முழுக்கப் பரவுகிற நொடியில் கவிதை தன் படைப்புப்பேற்றை அடைந்து கொள்கிறது. அதன் பிறகு அதை மனப்பாடம் செய்து கொள்கிற அளவுக்கு மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டு மகிழ்தலும் நிறைதலும் அவரவர் தனிப்பட்ட வாசிப்புத் தன்மைக்கேற்ற விருப்பம். அப்படி முதல் வாசிப்பிலேயே உன்னதத்தை அடைந்து விடுகிற கவிதைகள் நிறைந்த தொகுப்பு. காதல் மூத்துப்  பித்தாகும் வேளையில் காமம் தொடும் கணங்கள் கவிதைகளாயிருக்கிறது. காமத்தை எழுதுகிறேன் பேர்வழி என்று வெறும் உறுப்புச் சிறப்புரைத்தல்களையும் புணர்ச்சி மகிழ்தலையும் மட்டுமே எழுதிக் குவிக்காமல் காதல் நுரைத்துச் சுழித்து மனமும் உடலும் கரையும் போதான நிகழும் போகத்தின் புனிதப் பிரதிகளாக உருப்பெற்றெருக்கிறது இத்தொகுப்பின் கவிதைகள். நிறைந்த நளின வளைவுகளோடும் அழிவில்லா அழகின் அமுதம் சுரந்தும் கலையாக் காமத்தின் கமக வாசங்களோடும் மழைக்கும் போதெல்லாம் வண்ண வண்ணமாய் மலர்வளாகவும் முத்தத்தின் போதெல்லாம் முகிழ்ப்பவளாகவும்
Image
ரசவாதி - பாலோ கொயலோ உறக்கத்தில் கண்ட கனவில் ஒரு புதையல் குறித்த தெளிவற்ற தகவல்களை நினைவில் வைத்துக் கொண்டு கண்ட கனவை நனவாக்கிப் பார்த்துவிடும் ஆசையோடும் மூர்க்கத்தோடு தீவிரமாக முன்னேறும் பயணத்தில் பிரபஞ்சத்தின் ஆன்மா பல்வேறான சகுனங்களைக் காண்பித்து வெற்றியை அடையச் செய்வதில் உதவி செய்தாலும் "உன் இதயம் எந்த இடத்தில் இருக்கிறதோ அங்குதான் நீ உன் புதையலைக் காண்பாயென்று ரசவாதியால் சாண்டியாகோவுக்குப் பல முறை அறிவுறுத்தப்பட்டு அவன் பெரும்பாடுபட்டு ஒருவழியாகப் புதையலைக் கண்டறியும் சாகசப் பயணக் கதை. புதையலைத் தேடித் தொடங்கும் பயணத்தில் தன் உடமைகளையும் , பணத்தையும் இழக்க நேர்கையிலும் மனத் தடுமாற்றங்களையும் உயிர்க்கே ஆபத்து வரும் சூழல்களிலும் என எப்போதும் புதையல் எடுக்கும் எண்ணத்திலிருந்து பின்வாங்கிக் கொள்ளலாமென்று பல முறை நினைக்கும் சாண்டியாகோ அதே வேளைகளில் எல்லாம் தான் பார்த்த பழைய, தன் மனதுக்குப் பிடித்த ஆட்டு இடையன் வேலையையும் செம்மறி ஆடுகளுடனான தன் இணக்கத்தையும் அடிக்கடி நினைத்து மகிழ்ந்து கொள்வான். அந்தத் தொழிலை விட்டு வந்தததற்காக வருந்தவும் செய்வான். ஆக அவனின் இதயம் முழுக்க செம்மற
Image
சரீரம் - நரன் அறை முழுக்கக் கதைகள் சரீர நிழலுருவம் பெற்று மிதந்தன. விதிவழிப்பட்ட வாழ்வின் வலியும் இழப்பும் நிறைந்த கதை மாந்தர்களின் கண்ணீர்க் கனம் தாளாமல் தரையில் படுத்துத் தலைச்சாய்த்தான். விரிந்து பரவும் கதைகள் மிதந்த படியே வந்து அவன் உடலின் மேல் விழுந்து விழுந்து மூடின. *** நரனின் கதையுலகம் மனிதன் தன் மன ஈனங்களால் நரகம் காணும் மறுபூமியாகவே வடிவம் கொள்கிறது. அங்கே மகிழ்வின், நம்பிக்கையின்,புத்துணர்வின் வீதம் குறைந்து மரணவேதனைகளின், காம மீறல்களின், தனிமைகளின், நம்பிக்கை துரோகங்களின் என தீராத கண்ணீர் காட்சிகளின் துன்பியல் விவரணைகளுமே நிறைந்து மனம் கொள்ளா முறையீடல்களோடு முடிவு வேண்டி நிற்கிறது. வாரணாசி கதையைத் தவிர அனைத்துக் கதைகளுமே விரைவில் நீங்காத மன அழுத்தத்தையும் அதிர்வுகளையுமே கொடுத்தது. வாரணாசி மட்டுமே முடிவில் வாசகன் விரும்பும் இயல்பைக் கொண்டிருந்து மகிழ்வித்தது. தொகுப்பில் வாரணாசி கதை எனக்கு மிகவும் பிடித்த கதையாயிருந்தது. ஆண் - பெண் உறவுகள் இரண்டு விதமான சார்ந்திருப்புகளின் வேறுபாடுகளில் சொல்லப்பட்டிருந்தது. தானாகத் தரும் வரை காத்திருக்கும் ஆணை பெண்ணுக்குப் பி
Image
உலகின் மிக நீண்ட கழிவறை - அகர முதல்வன் ம்ம்ம் கொட்டிக் கேட்டுத் துயருர மேலும் சில வசனகவிதை நடையிலான கொடுங்கதைகள். அகரமுதல்வனின் தமிழுக்கு முதற்பெருவணக்கம். கொதித்துச் சிந்திய ரத்தத்துளி போல் வரைபட அடையாளம் பெற்றுவிட்ட நாட்டில் ஆளப் பங்கு கேட்டதால் மரணங்களைக் கொண்டு நாட்களை நினைவுகூறும் ரத்தச் சிவப்பில் ஒளிரும் நாட்காட்டிகளைப் பார்த்துக் காலம் கடத்தும் பெருந்துயர் வாழ்வின் சிற்றுயிர்க் கதறல்களே இந்தக் கதைகள். விடுதலைக் காற்றைத் சுகிக்கப் போராடிய பல்லாயிரம் போராளிகளின் கடைசி மூச்சுக் காற்றும் கூடிச் சேர்ந்து கனமேறி வீசும் நிலத்தில் பிறந்துவிட்ட மக்களின் நலமும் மகிழ்வும் நிர்மூலமாக்கப்பட்டதின் சாட்சியங்கள் கல்லறையிலுறைந்துவிட்ட பின் யுத்தத்தில் தப்பிப் பிழைத்ததும் சிறையுண்டதும் நாடு கடந்ததும் மரணத்தை விடவும் வலி மிகுந்ததாகவும் வெளிச்சமும் தெளிவுமற்ற எதிர்காலத்தைக் கொண்டதாகவுமே இருக்கிறது உலக நாடுகள் சேர்ந்து முதுகில் குத்தி முகம் சிதைத்த அந்நில மக்களுக்கு. போர்முடிந்து பகைமுடியாத கணக்காய் உலவும் கண்ணிவெடிகளாய் வாழும் இயக்கத்தினரைத் தேடித் தேடிக் களைதலையும் சிறைவைத்துத் துன்புறுத்தலையு
Image
பீஃப் கவிதைகள் -  பச்சோந்தி பச்சோந்தி . எனக்குப் பழக்கமில்லையென்று தான் நான் ஒரு உணவைச் சாப்பிடாமல் தவிர்க்கிறேன். ஆனால் அதை விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனைத் தடுக்கச் சட்டமெல்லாம் போட்டு சாப்பிடக் கூடாதென்று கட்டாயப்படுத்தப்படும் போது நானுமே அச்சட்டத்தை மீறுவது பிழையொன்றுமில்லை. ஏனென்றால் உணவு அவனவன் விருப்பம். ஒரு உணவுக்கிருக்கும் நம் வாழ்வோடான பல்வேறான தொடர்புகளையும், நம் உணவை நாம் தேர்ந்தெடுப்பதில் பொதுச் சமூகத்திடமிருந்து வரும் விருப்பு வெறுப்புகளையும் ஏளனங்களையும் அது உட்கொண்டிருக்கும்  சமூக அரசியல்க் காழ்ப்புகளையும் நிதானித்துப் பார்க்கச் செய்திருக்கிறது. உணவரசியல் குறித்த பரந்து விரிந்த பார்வைகளோடு இன்னுமே காத்திரமாகவும் கச்சிதமாகவும் வந்திருக்க வேண்டிய படைப்பு. காலம் வாய்ப்பளிக்கும் போதே வரலாறை நிகழ்த்திட வேண்டும்.ஆனாலும் கருத்துரிமை எதிர்ப்புகளும் பிரிவினைவாதங்களும் தம் வன்முறைக் கொலைவாளேந்தி நிற்கும் இக்காலகட்டத்திற்குத் தேவையானதும் முக்கியமானதுமான முன்வைப்பு.
Image
வ ருசம் ஞாபகமில்ல.ரொம்ப சின்ன வயசுல என் பெரியப்பா வீட்ல லக்ஷ்மி அவர்கள் எழுதிய கௌரின்னு ஒரு நாவல். பழைய நாவல். அத வாசிச்ச்தது தான் என் முதல் வாசிப்பனுவ ஞாபகம். கதை கூட இப்ப கொஞ்சம் தான் ஞாபகமிருக்கு. பிற்பாடு சினிமா மேல இருந்த ஆர்வத்துல விகடன் குமுதம்னு பல வருசம் வாசிப்பு தொடந்தது. 11 ம் வகுப்பு படிக்கும் போது கோடை விடுமுறைல என் ஆசிரியர் எனக்கு படிக்கக் கொடுத்த நாவல் வைரமுத்துவின் தண்ணீர் தேசம். அத ிலிருந்த காதலுக்காகவே பல தடவ வாசிச்சு சிலாகிச்சு அத முழுசா முடிச்சிட்டு இன்னும் நிறைய வாசிக்கனும்னு பேரார்வத்தோட அங்கிருந்து தொடங்குனதுதான் தீவிர வாசிப்பு. சுமார் 15 ஆண்டுகாலமா வாசிக்கிறேன். ஆனாலும் இத்தனை வருச காலமா நான் அபுனைவுகள படிச்சதே இல்ல. எஸ்.ராவின் விகடனில் வந்த ஒன்றிரண்டு கட்டுரைத் தொகுப்புகளைத் தவிர. மற்றபடி ஒரே ஒரு கட்டுரைத் தொகுப்பு கூட என் வீட்ல இல்ல. நான் வாங்கி வாசிக்க ஆசைப்பட்டதும் இல்ல. அப்படி புனைவே படிக்காம கட்டுரை புக்காப் படிப்பவங்களை நான் கிண்டலெல்லாம் கூட பண்ணிருக்கேன். படிச்சு அறிவா வளர்ந்திரப் போகுதுன்னு. கவிதை, சிறுகதை, நாவல் மட்டுமே நான் வாசிக்க என்னை அது என்
Image
இச்சா-  ஷோபா சக்தி அகதி வாழ்க்கை ஒது மனிதனின் சுயத்தை மெல்ல மெல்ல அழித்து,கடைசியில் அவனை அரைத்துண்டு விசா காகிதமாக உருமாற்றி விடுகிறது. ஒரு மெல்லிய காற்றுக்கே பறந்துவிடக் கூடியவனாக இருக்கிறான் நாள்பட்ட அகதி. - ஷோபா சக்தி நாவலை வாசித்து முடித்து மூடிவைக்கிறேன். ஆலாப்பறவையொன்று உயிர்பெற்று என் அறைக்குள் சிறகடிக்கத் தொடங்குகிறது...
Image
லாகிரி -  நரன் அம்மா ! நம்மிடம் சொற்களிருந்ததா? ஆம் மகளே ... அவைகள் வாய் திறந்தால் தண்டிக்கும் நீதிமான்களுப் பயந்து கட்டுண்டிருக்கிறது. இருந்ததும் தளைகளுதறியெழுந்து விரும்பியபடி வெளிப்படும் விடுதலையைக் கேட்டு நாளும் வீதி வீதியாய்க் கூவிக்கொண்டிருக்கிறது.
Image
அகாலம் - கே.என்.செந்தில் எழுத்தாளர் - "நான் சில கதைகள் சொல்றேன். கதை மட்டும் சொல்றேன். அதுக்குள்ள என்னோட அனுபவக் கருத்திருக்கா அல்லது அது உன் அறிவைச் சோதிக்குமா என்றெல்லாம் நீயே படிச்சுத் தெளிஞ்சுக்கோ. அதையும் நானே வரிக்கு வரி சொல்ல மாட்டேன்" என்ற முன்கூட்டிய திட்டமிடலோடோ அல்லது இயல்பாகவோ அமைந்து விட்ட 5 கதைகள் கொண்ட தொகுப்பு. ஒரே ஒரு வரி கூட கதைக்கு வெளியே எழுதப்படவில்லையென்பதே இதன் ஆச்சர்யம்.   வாழ்வு என் கருத்தைச் சொல்கிறேன் கேள் என்று கதைக்கிடையே தன் மேதமைப் பிரசங்கங்களை நிகழ்த்தாமல் கதையை மட்டுமே சொல்லிச் சென்றிருக்கிறார். இது பிரசங்கங்கள் கூடிப்போனதால் உண்டாகும் அலுப்பைவிட குறைவாக இருப்பதால் தடையற்ற வாசிப்புக்கு நல்லதாகவே படுகிறது. 3 கதைகளில் பொருந்தாக் காமமும் அதனியல்பாக நிகழும் மீறலும் சுகம் கண்ட மயக்கத்திலாழ்ந்திருந்த வேளையில் வெளிப்படும் தெளிவும் பின்வாங்கலும் அதன் பிறகான விலகலும் தனிமையும் இயலாமையும் அன்பின்மையும் ஒன்று சேர்ந்து வெளிப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் எப்படியாவது வாழ்வைக் கடத்திவிட வேண்டுமென்ற சுயநல எண்ணத்தைத் தவிர வேறொரு காரணியாக என்ன இருந்திடப
Image
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் -  கதிர் பாரதி முதல் வரியில் பற்றும் தீ மெல்ல மெல்ல வளர்ந்து வந்து கடைசி வரியில் வெடித்துச் சிதறி உடல் முழுக்கப் பரவிச் சிலிர்க்கையில் கவிதை சுகானுபவம்.
Image
உப்புக்கடலைக் குடிக்கும் பூனை -  க. சீ. சிவகுமார் வாழ்வின் மீதான ஈடுபாடு மட்டுமே நம்மை உலகின் பற்சக்கரங்களோடு பொருந்த வைக்கிறது. கதைகளோடு நம்மைப் பொருத்திப் பார்க்கும் அனிச்சையைச் சுலபமாகச் செய்துவிடுகிற எளிய கதைகள்.
Image
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்- மயிலன் ஜி சின்னப்பன் காரணம் தெரியாத மரணமொன்றின் பலியாய் மறைந்த ஆளின் கதையொன்று எங்கள் வீட்டிலும் இருக்கிறது. நேற்றைக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கழிந்த அவனின் மரணக்காரணம் இன்றைக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேலைக்குப் போன இடத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டானென்ற முதல் தொலைபேசி எனக்குத்தான் வந்தது. உயர் சிகிச்சைக்கு வேண்டி (உயிர் இருக்கிறதா என்றறியாத மர்மங்களுடன்) தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றும் செய்தி எனக்குத்தான் முதலில் சொல்லப்பட்டது. எத்தனையோ முயன்று பார்த்து விட்டோமென்றும் நாங்கள் அளிக்கும் மருத்துவத்தை அவனது உடல் ஏற்க மறுத்துவிட்டது என்ற பூடக மொழியில் ஆள் செத்துப் போய்விட்டானென்ற துக்கச்செய்தியும் அரசு மருத்துவமனையில் 8 மணி நேரக் காத்திருப்புக்குப் பின் முதன் முதலாக எனக்குத்தான் சொல்லப்பட்டது. பொட்டலமாய்க் கிடைத்தவனை குழிக்குள் இறக்கி வைத்து கடைசியாக முகம் பார்ப்பவர்கள் என்ற வரிசையில் முதல் ஆளாக நின்றதும் நான் தான். ஆனால் அவனின் மரணம் ஒருபோதும் தற்கொலையல்ல என்ற தீர்க்கமான முன்முடிவுட