Posts

Showing posts from August, 2020

வைகை அணைத் தார்ச்சாலையில் அமர்ந்து வாசித்த நினைவுகள் மலர ... ❤️

Image
  வைகை அணைத் தார்ச்சாலையில் அமர்ந்து வாசித்த நினைவுகள் மலர ...  ❤️

ஒரு மழை நாள் காலையில் ...

Image
 ஒரு மழை நாள் காலையில் ...   
Image
இத்துப் போன இதிகாசம்ங்க கசந்து போன காவியம்ங்க பிழைப்புக்கு வழியில்லாப் பிரதிங்க உழைப்புக்கு ஓய்வில்லாக் கதைங்க ஆண்டமாரும் பெரிய துரைமாரும் கரைக்காரும் வயக் கொத்துக்காரும் கூறுபோட்டு வீசிய கந்தலுங்க சீருபோட்டு பேச ஒன்னுமில்ல சாதியில ரொம்பக் கீழங்க சந்ததிப் பெருமைன்னு ஏதுங்க சகதி அழுக்கோட மல்லுக்கட்டும் சனத்துக்கு வண்ணான்னு பேருங்க பிரவசத்துக்கு நாங்க வேணும் குச்சுக்கட்ட நாங்க வேணும் மேடைகட்ட நாங்க வேணும் பாடைகட்ட நாங்க வேணும் வெள்ளாமைக்கு நாங்க வேணும் வெள்ளாவிக்கு நாங்க வேணும் நல்லதுகெட்டதுக்கு நாங்க வேணும் போனதுவந்ததுக்கு நாங்க வேணும் வேளை பார்க்காமக் கூப்பிட்டு வேலை சொன்னாச் செய்யனும் வாடா போடான்னு ஏசினாலும் வாயத் திறக்காம நிற்கனும் கையப் பிடிச்சு இழுத்தாலும் வைக்கோலுப் பொம்மை போல முந்தனை விரிச்சுப் படுத்துட்டு மறைவுல மாரடிச்சு அழுகனும் ஆம்பிளைக பேசாம அடங்கனும் பொம்பளைக கூசாம மடங்கனும் பொதிமாட்டுக் தலை தூக்காம காலத்துக்கும் கதியேன்னு கடக்கனும் ஆனாலும் ஆகாத ஆளுக அடிச்சாலும் நோகாத மேலுக போக்கத்த பயலுகன்னு வஞ்சாலும் பொதுவுல பொங்காத சாலுக எங்கள மாறவும் விடமாட்டீக உங்கள மீறவும் விடமாட்டீக
Image
  சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் - கே.வி.ஷைலஜா வாழ்ந்து மட்டுமே கற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது வாழ்க்கை. - பாலச்ச்சந்திரன் சுள்ளிகாடு கடந்து வந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால் ... குறைவின்றிக் குழந்தமையை அனுபவித்ததும், பெற்றோரைப் பெருமிதப்படுத்தியதும், கற்பித்தோரைப் கௌரவப்படுத்தியதும், நினைத்தது நடந்துவிட்ட உணர்ச்சிகரமானதும், இருப்பதைக் கொண்டு மனம் நிறைந்ததும், இல்லாமைகளின் போது சுயம் அழிந்ததும், முடிந்துவிடக் கூடாதென்று வேண்டியதும், இப்படியே இருக்கும் என்று நம்பியதும், தோற்றுப் போய் கையறுநிலையில் நின்றதும், நம்பியவர்களைத் துரோகித்ததும், அடுத்தவருக்குப் பயனுள்ளதும், உடனிருப்பவரை மகிழச் செய்ததும், குறைந்தது நமக்காவது திருப்தியுள்ளதுமான எத்தனையோ நிகழ்வுகளோடு வாழ்ந்திருப்போமென்று அறத்தின் தராசில் எதிர்காலத்தை நடுவில் முள்ளாய் நிறுத்தி நல்லது கெட்டதுகளை நிறுத்துப் பார்க்கச் செய்கிறதிருக்கிறது இந்தத் தொகுப்பு. அன்பினால் என்னை வழி நடத்தியவர்களையும் நான் செய்த பாவங்களால் நொறுங்கிப் போனவர்களையும் ஒரு சேர நினைத்துக் கொள்கிறேன்.