Posts

Showing posts from January, 2020
Image
சுமித்ரா - கே.வி.ஷைலஜா சுமித்ரா என்ற நாவலைத் தன்னிடம் அறிமுகப்படுத்தி அந்நாவலிலிலிருந்து ஜெயமோகன் சொன்ன ஒருவரிதான் நாவலை வாசிக்க வேண்டுமென்றும் வாசித்து முடித்தும் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் தூண்டியது என்றும் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா முன்னுரையில் கூறியிருக்கிறார். அதேபோல் ... "மற்ற உடல்களில் இருந்துகொண்டு சின்னச்சின்ன சாயல்கள் வழியே சுமித்ரா அவனை தினம் தினம் வழி நடத்தினாள்". என்ற இந்த ஒரு வரிதான் இந்த நாவலை என் வாழ்நாள் முழுமைக்குமாக வாசிப்பின் பெரும்பேறாக மாற்றியிருக்கிறது. முதல் பக்கத்திலேயே இறந்து போகும் சுமித்ராவை அவர்தம் கணவரின், மகளின், உறவுகளின், வீட்டுப் பணியாளர்களின், அயல்வாசிகளின், தோழிகளின், நெருங்கிய நண்பர்களின், ரகசிய சினேகிதரின், நினைவுகளின் வழியே ஒவ்வொரு வரியிலும் தன் கவித்துவ எழுத்தால் உயிரோடுலவச் செய்திருக்கிறார் கல்பட்டா. சுமித்ராவின் பாதம் முதல் தலை வரை உடல் முழுதும் ஒவ்வொருவரின் பார்வையிலும் வணங்கவும் வர்ணிக்கவும் படும்போது மனம் என்ற ஒன்றைப் பற்றிப் உணரப்படவோ நினைக்கப்படவோ இல்லாமல் போவதில் எத்தனை பெரிய துர்பாக்கியம். உடல்தவிர்த்த வா
Image
தீக்கொன்றை மலரும் பருவம் - லதா அருணாச்சலம். "என்னைப் பார்த்து , உன் வாழ்க்கையில் நீ செய்த நல்ல காரியங்களைச் சொல் என்று கேட்டால் என்னால் ஒன்று கூட நினைத்துப் பார்க்க முடியாதென்று" கூறி வருந்தும் போதைப் பொருள் விற்கும் ரவுடி இளைஞனுக்கும் ... முதுமையின் பலவீனம் ஏற்படுத்தும் அழிவை எதிர்க்கும் ஒரு போராட்டத்தோடு தன்னைப் பொருத்திப் பார்க்கும் போது தன் வாழ்வு புதிய அர்த்தம் கொள்கிற நிலையை ரசிக்கிற ஐந்து   குழந்தைகளின் பாட்டிக்கும் ... இடையிலான எந்த விதமான சமூக நிர்பந்தங்களுமற்ற,குடும்ப பொறுப்புகளற்ற ,வேறொரு மாய உலகத்துக்குச் சென்று தடைகளேதுமின்றி அன்பு செய்து கொண்டே வாழ்ந்துவிட எண்ணி தன் தடுமாற்ற சுயத்தோடு வாழ்வின் ஒழுங்கு விதிகளில் மீறலைக் கைக்கொண்ட போது அடைந்த வலியும் இழப்பும் நிறைந்த கதை. பெண்கள் நிறைந்த,பெண்களின் இல்லற வாழ்வியல் மற்றும் அதையொட்டியே நிலைமாறும் பெண்களின் உளவியல் இன்னல்கள் நிறைந்த கதையோடு நாட்டின் அரசியல், சட்டத்தால் சரிசெய்துவிடமுடியாத ஒழுங்கின்மைகளும் உழைப்புக்கான அதாரங்களற்றதால் வறுமையும் சமூக அவலங்களும் தலையெடுத்தாடும் நகரின் கதையும் இணைந்தே பின்னப்பட்டி
Image
நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன். நேற்றுத்தான் பேசிக்கொண்டிருந்தேன். இன்றைக்கு நடக்கும் கதைகள் மாடர்ன் லைப் பத்தின கதைகள் நாம வாசிச்சு சுலபமா நம்மோடு இணைத்துவைத்துப் பார்த்துக் கொள்கிற கதைகள் எந்த அளவுக்குத் தமிழ்ல எழுதப்பட்டு விற்பனைக்கு வருகிறதுன்னு. அதுக்குப் பதில் சொல்ற மாதிரியான ஒரு நாவல் தான் இது. நான் இந்த நாவலை வாங்கின ஒரே காரணம் ஐடி பத்தி ஒரு நாவல் தமிழ்ல எழுதிருக்காங்கன்னு  ஆச்சர்யத்திலும் எதிர்பார்ப்பிலும் தான். இதுவரைக்கும் சில சிறுகதைகளிலும் , பேட்டை, பெயல் நாவல்களில் கொஞ்சம் நான் ஐடி லைப் பத்திப் படிச்சிருக்கேன். முழு நாவலுமே ஐடி பற்றியதென்ற உடனே ஆர்வமா வாங்கி வாசித்தேன். 90 களின் மத்தியில் இந்தியாவில் பிரபலமாகத் தொடங்கி இன்று ஐடி என்றாலே அதில் இந்தியர்களின் மூளைதான் சிறந்தது என்று பெயரெடுத்திருக்கும் தகவல் தொழில் நுட்பத்துறையைக் குறித்து இதுவரைக்குமாகப் புழங்கி வரும் கௌரவ வேலை, உயர்வான ஊதியம், வெளிநாட்டு வேலை - பயணம் , குடும்ப வசதி உயர்வுகள், சமூகத்தில் கவனம் பெறல், நேரம் காலமற்ற வேலை தரும் மன அழுத்தம், பதவி மற்றும் சம்பள உயர்வுக்காக நடக்கும் கால் பிடித்த
Image
யாவுமே உன் சாயல் - காயத்ரி ராஜசேகர். தீராக் காதலின் மேலுமொரு தித்திப்பான பிரதி. காயத்ரி ராஜசேகர் அவர்களின் எழுத்தை முகநூலிலேயே நான் நிறைய வியந்து வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு கவிதைக்கும் அதற்கான உணர்வும் தகுந்த வார்த்தைத் தேர்வுகளும் மிகவும் கச்சிதத் தன்மையோடிருக்கும். துருத்திக் கொண்டு ஒரு வார்த்தை கூட இருக்காது. அவரின் தொகுப்பு வரும்போது ஆவலுடன் வாசித்ததின் அனுபவமே இது ... ஆதிகாலம் தொட்டுப் பேசிவரும் காதலில் பெண்மனமடையும் மகிழ்வையும் சுகத்தையும் காதலிலும் இல்லறத்திலும் பெண்ணடையும் எதிர்பார்ப்பும் காத்திருப்பும் விரக்தியும் ஊடலும் அதே நேரம் அக்காதல் நிறைவேறாமல் போகும்போது பிரிவின் வலியையும் அதே பெண்மொழியில் எளிமையான புரிதலில் ஈரத்தோடு பேசுகிறது இக்கவிதைகள். அருகாமைக்கு ஏங்கவும் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டும் மன்றாடல்களும் தன் தனிமையின் வலிதீர்க்கச் செய்யும் பிரார்த்தனைகளும் நிறைந்த ஒரு வழிபாட்டுச் செயல் போல காதலை எழுத முடிந்திருக்கிறது. அதேநேரம் சில கவிதைகளில் நீயின்றி என்னால் எதுவும் முடியாதா ? என்ற எதிர்த்தர்க்கம் பேசும் தொனியிலும் இருக்கிறது. காதலென்ற ஒரே உணர்வில் இத்தனை மாதி
Image
கொண்டல் - ஷக்தி ஒரு கொலை ஒரு காதல் ஒரு புயல் மூன்றுமே திட்டமிடல் போல ஒருவனை நொறுங்கச் செய்யும் கதை. அவ்வொருவனின் பார்வை வழி அண்ணனின் கொலையும் அன்பில் பிழைத்த காதலும் ஒரு புயல் கடந்த பாதையில் வாழ்விழந்த மக்களின் இழப்பையும் வலியையும் அனைத்தையும் வெற்று அறிக்கைகளில் கடக்கும் அரசியலையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் கரை கடந்துவிட்ட காற்றின் சீற்றத்தோடு பேசுகிறது நாவல். அரசியல்வாதிகள் தம் சுய நலங்களுக்காக கைவிட்டுவிட்ட தமிழர் நிலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நிகழ்ந்து வரும் நிலம், நீர் ,காற்று என்று இயற்கை வளங்களைப் பாழாக்குவதை எதிர்த்து நாளொரு போராட்டங்கள் நடைபெறுவதும் அதை நடத்தும் தன்னார்வலர்களை அடக்குவதும் ஒடுக்குவதும் கொல்வதும் கூட நடப்பதைக் கண்டும் காணாமல் நாம் கண்மூடிக் கடந்து கொண்டுதானிருக்கிறோம். அப்படிக் கதைநாயகனின் வழக்கறிஞரான அண்ணன் பாழ்படும் தம் நிலத்தைக் காக்கவேண்டி சட்டப் போராட்டம் நடத்தப்போய் சம்மந்தப்பட்டவர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டு இறக்கிறார். அவரின் குடும்பமும் சுற்றமும் கொலைக்கெதிராக வினையாற்ற இயலாத ஆத்திரத்தை அழுகையில் அடக்கிக் கொள்வதில் தொடங்குகிறது கத
Image
தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ். வாழ்வாங்கு வாழவைத்த வயலும் தோப்பும் குடியிருப்பு நகரான எதார்த்தச் சித்திரம். அதில் இயற்கையின் மீதான நேசமும் சக மனித அன்பும் சரிந்த கதை. வானுக்குக் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் அமிர்தமான மழை பொய்த்து விவசாயம் அழிந்து போகிறபோது சமூகம் அடையும் அகபுற மாற்றங்கள் , நிலம் மற்றும் சூழல் அடையும் உருமாற்றங்கள், நீராதாரப் பாழ்படல்கள், தொழில் நெருக்கடிகள் - போட்டிகள், பொ ருளாதாரப் பின்னடைவுகள், அதனுள் முளைக்கும் ஏற்றத்தாழ்வுகள், இடப்பெயர்வுகள், அதில் சோமு என்ற மூத்த குடியானவரின் குடும்பம் பாதிக்கப்பட்டு அவர்கள் பண்ணையம் பார்த்து வந்த நிலம் கைவிட்டுப்போவது சார்ந்த பிரச்சினைகள், அவரின் தம்பி குடும்பத்தின் கணவன் - மனைவி அதிகாரக் கூச்சல்களில் சிக்கி அழியும் வாழ்வு, பறிபோகிற உயிர்கள், சோமு குடும்ப உறவுகளுக்குள் நேர்கிற சொத்துப் பகிர்வுகள் தொடங்கிய மனஸ்தாபங்கள், அடுத்து என்னவென்று அறியாத அலைக்கழிப்புகள்,வாழ்வியல் தேவைகளுக்காக விவசாயத்தை விட்டு வெளியேறிப்போய்த் தேடிக் கொண்ட தேற்றுதல்கள், அடுத்தடுத்த தலைமுறைகளின் கேள்விக்குள்ளாகும் எதிர்காலங்கள், பிழைப்புக்கான அல்லல்
Image
வெண்கடல் - ஜெயமோகன். மாறாத மானுட அன்பையே வாழ்வின் அறமாகப் போற்றும் கதைகள். ஒரே ஒரு வரியில் மொத்த கதையையும் நமக்குள் வேறொன்றாக மாற்றி புது தரிசனத்தைக் காட்டும் ஆசானின் எழுத்து காலமெல்லாம் கசிந்துருகச் செய்யும் பேரனுபவம் தான். கிடா, தீபம், நீரும் நெருப்பும், நிலம் ஆகிய சிறுகதைகளில் அப்படியாகத்தான் ஆசானின் மேதமை எழுதப்பட்டிருக்கிறது. தீபம் கதையில் முடிவில் வரும் ஒரு வரி ... "இனிமே எங்கயானாலும் ஒரு சாதாரண வெளக்கே போதும். உன் முகத்தை நானே பார்த்துக்குவேன்" என்று தன் அத்தை மகளிடம் முருகேசன் சொல்வதது எளிய சொற்களின் வழி காதலின் பெரும் பிரவாகத்தையே நிகழ்த்திக் காட்டச் செய்துவிடுகிறார். கிடா கதையில் அந்தக் கிடாவெட்டுக்கு லாரியில் போகும் கூட்டத்தில் ஒராளாக நம்மை இருத்தச் , விவரணைகள். தம்பிக்கு அத்தை மகளை விட்டுக் கொடுத்து விட்டு படபடப்புடன் சிகரட்டை இழுக்கும் பழனியா தன்னைக் கேட்காமலேயே தன் திருமணத்தை முடிவு செய்த சிதம்பரமா யார் தான் அங்கே வெட்டப்பட்ட கிடாவுச் சமம் என்ற இருவேறு நோக்கில் யோசிக்கும் போது கதை ஒரு புதிய புதிய உச்சங்களைத் தொட்டு நம்மைக் கலங்கடிக்கிறது. கைதிகள் கதை தான் தொ
Image
பச்சைய மழை - இன்போ அம்பிகா அன்பின் மொழி பேசும் கவிதைகள் சக உயிரின் மேல்,காதலின் மேல், இயற்கையின் மேல், விவசாயத்தின் மேல், அஃறிணைகளின் மேல், என காணும் அனைத்தின் மேலும் அதன் சுக வாழ்வுக்காய் அன்பைச் செலுத்த எண்ணும் கவிதைகள் நிறைந்திருக்கிறது. விவசாயத்தின் பேரழிப்புக்கும் மறுமலர்ச்சிக்குமான கவிஞரின் குரல் பெரிதாக உயர்ந்திருக்கிறது.அவர்களது பக்கம் நின்று பேசக்கூட ஆளற்றுப்போய்க்கொண்டிருக்கும் வேளைகளின் அவர்களின் இன்னல்கள் கவிதைகளாகி நாம் தெரிந்தும் தெரியாமல் கடந்து போய்விட எண்ணுகிற நம் பாரா முகத்திலறைகிறது. எளிய மொழியில் எந்த பூடகங்களுமற்ற வார்த்தை ஜாலங்களுமற்ற நேரடியாகப் புரிந்து கொள்ள முடிகிற கவிதைகள். இன்னும் சில வார்த்தைகள் மட்டும் கூர்மையாக வந்திருக்கலாம் எனத் தோன்றும் சில கவிதைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் உலக இயந்திரமாதலுக்கானதும் இதயமற்றுப் போயிருப்பதற்கானதுமான காத்திரமான எதிர்ப்பையும் என்றென்றைக்கும் கொண்ட மனதிலிருந்து துளியும் மாயாத காதலையும் அன்பையும் அத்தனை ஈரமாக வெளிப்படுத்தியிருக்கிறது. பிடித்த கவிதைகள். ஊர்வந்து இறங்கிய பின்னரும் என் மரக்கிளையில் படபடத்துக
Image
நான் ஏன் வாசிக்கிறேன் ...? நான் வாசிக்கவில்லையென்றால் என் சுயம் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது. என் உலகின் நிஜம் என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது. என் தோல்விகளும் இழப்புகளும் என் முதுகின் மேல் என்றென்றைக்கும் மாயாத பெரும்பாரமாய்க் கனக்கிறது.என் எதிர்காலமென்ற மிகப் பெரிய விடையறிய இயலா கேள்விக்குறியின் கொக்கி பாகம் என் கழுத்தை சுழித்து நெரிக்கிறது. என் அகமே துலாக்கோலாகி என் நல்லது கெட்டதுகளை நிறுத்துப் பார்க்கும் நீதிபதியாகி எனக்கான தண்டனை விபரங்களைக் கணக்கிடுகிறது. நான்  செய்த பாவங்கள் என் கண் முன்னே பழிதீர்க்கும் ஆயத்தங்களுடன் நின்று பல்லை நெரிக்கிறது. ஆகமொத்தம் இத்தனை துயரங்கள் நிறைந்த சமகாலக் கயிறிறுக்கங்களில் இருந்து என்னை இளக்கிக் கொள்ளவும் நான் இனிமேல் வாழ விரும்பாத நிஜமான இந்த உலகிலிருந்து என்னைத் துண்டித்துக் கொண்டு கனவுகளும் கற்பனைகளும் நிறைந்த அந்தர உலகில் மிதந்து கொண்டே இத்தனைக்குப் பிறகும் இன்னுமிருக்கும் நாட்களை கடத்தி விடவும் சுலபமானதும் எனக்கு மிக மிக பிடித்ததுமான ஒரே ஒரு வழியென்பதால் வாசிக்கிறேன். மற்றமடி அறமோ அறிவோ அடைய அல்ல.
Image
சிலிர்ப்பு -  தி. ஜானகிராமன்  கோபுரத்துடன் சந்நிதி சங்கீதம் காவிரி வெற்றிலைச் சீவல் காபி ரயில் குளம் அதீத ரசனையுடன் படைக்கப்பட்ட ஏராளமான பெண்கள் அவர்களைச் சுற்றி வாழும் ஆண்கள் வாழ்ந்து நிறைந்த கிழவர்கள் தீர்வுதேடும் மனச்சிக்கல்கள் நிறைய அறம்கொண்ட மனிதர்கள் இவைகள் தான் இந்தத் தொகுப்பு முழுக்க. வாசிக்க வாசிக்கத் திகட்டாத இவ்வளவு சுகமான எழுத்து நடை. திண்ணையிலமர்ந்து கொண்டு ஒரு மூத்தவரிடம் கதை கேட்பது போலான சுகத்தில் அவர்சமூக மக்களின் வாழ்க்கையை அத்தனை உன்னிப்பான கவனிப்போடு பதிவு செய்திருக்கிறார். நீட்ட வேண்டிய இடத்தில் கொஞ்சம் நின்று நிதானமாகவும் சுருக்கிய சொற்களில் பட்டென்றும் பேசிச் செல்லும் எழுத்தாளுமை வியப்பு. தி.ஜா.வின் தனித்தன்மையை யாரும் நெருங்க முடியாதபடிக்குப் பார்த்தும் கொள்வது அவரின் எளிமையான உரையாடல்களில் மறைந்திருக்கும் அழுத்தமான சொற்களில் அமைக்கப்பட்ட நுட்பமான பார்வைகள் தான். 29 கதைகள். 29 கருத்து. அப்படியெல்லாம் இல்லை. ஒரே முழக்கம் மனிதம் மட்டுமே. அதை விதவிதமான மனிதர்களின் கீழ்மைகளுக்கும் மேன்மைகளுக்கும் இடையிலாக ஓடும் நதி போல காட்டுகிறார். ஒரே ஆள் சில நேரங்களி
Image
மானசரோவர் - அசோகமித்திரன். ஒரு சிறுகதைக்கான சிரத்தையுடனும் கச்சிதத்துடனும் ஒரு நாவல். மூன்று மணி நேரத்திலேயே நான் வாசித்து விட்டேன். உள்ளும் புறமும் வேறு வேறான சிந்தனைகளும் செய்ல்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் மனப்பிறழ்வுகளும் கொண்ட இரு நண்பர்களின் கதை. சினிமா உலகம் எத்தனை கவர்ச்சியானதோ அத்தனை அசிங்கங்களும் அத்தனை வறுமைகளும் நிறைந்ததே. கோடிகள் புரளும் சினிமாக் கம்பெனியில் அடுத்த வேளை சோற்றுக்குக்  கூட வழியில்லாத பாவப்பட்ட கூலிகளின் வாழ்வியலை அருகிலிருந்து பார்த்தவர் அல்லது தானும் அதே போல் வாழ்ந்தவரென்பதால் அந்த மாய உலகத்தைப் பற்றி எழுதி எழுதி பழுத்த கதை. சினிமாத் துறையைச் சார்ந்த ஒரு உச்ச நட்சத்திரத்துக்கும் ஒரு சாதாரண கதையாசிரியருக்கும் இடையில் ஏற்படும் எதிர்பார்ப்புகளற்ற மனமொத்த நட்பு அவர்களை நெருங்கச் செய்து காலங்கள் கடந்து தத்தமது பிழைகளையும் நிலைகளையும் உணர்ந்து மனம் திருந்தச் செய்வது வரை இருவரையும் இணைந்திருக்கச் செய்கிறது. ஒரு ஒழுக்க மீறல்.ஒரு குடும்பத்தை, இரு மனிதர்களை எப்படிப் பாதித்து அவர்களின் வாழ்வையும் மனதையும் எப்படி பாதிக்கிறது ? எதிர்காலத்தை எப்படி அலைச்சலுக்குள்ளா
Image
இடம் பெயர்ந்த கடல் -  க. மோகன ரங்கன் தொகுப்பு முழுக்கவே இது போன்ற நறுந்தமிழும் வாசிப்பின்பமும் நிறையும் கவிதைகள் தான். 35 ரூபாய்க்கு என் வீட்டு நூலத்தில் மேலுமொரு பொக்கிசமாய் ...
Image
வெண்ணிலை - சு. வேணுகோபால் கைவிடப்பட்டவர்களின் கதைகள். மழையால், விவசாயத்தால், ஊரால், குடும்பத்தால், உறவுகளால்,காதலால் என அனைத்திலும் கைவிடப்பட்டு வாழ்க்கையை விரக்தியுடனோ அல்லது அவ்விரக்தியிலிருந்து மீள சிறுபெரு நம்பிக்கைகளுடனோ அல்லது மீறல்களுடனோ வாழ்ந்து தீர்ப்பவர்களின் கதைகளாகவே தொகுப்பு முழுவதுமிருக்கிறது. வாசித்த முதல் கதையே - உயிர்ச்சுனை - ஆழ்துளைக்கிணறு தோண்டியாவது தன் நிலத்தையும் வாழ்வையும் காத்துக்கொள்ள எண்ணி அரும்பாடு பட்டு ஆழ்துளை கிணறு தோண்டி அது நீரின்றிப் பொய்த்துப் போகிற சோகத்தோடு முடிகிற கதை. விவசாயத்தின் விவசாயிகளின் இன்றைய நிலைமை ஒரே கதையில் அறிந்து கொள்ளலாம். உள்ளிருந்து உடற்றும் பசி - திருமணமாகா அண்ணன் தங்கைகளின் மீது பாலியல் சீண்டலைத் தொடுப்பதான கதை. அதிர்ந்தே விட்டது கடைசி வரியில். வெண்ணிலை - யாரும் துணையில்லா முன்பின் பழக்கமில்லா நகரத்தில் இறந்த தந்தையின் பிணத்தை வைத்துக் கொண்டு அடுத்தென்ன செய்ய என்றறியாமல் நிற்கும் ஒரு பெண்ணிற்கு அவள் முன்பு வேலை பார்த்த கடைக்கு வந்து போன சில இளைஞர்களால் உதவி கிடைத்து வீடுபோய்ச் சேர்வதான கதை. புத்துயிர்ப்பு - மழ
Image
கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் -  போகன் சங்கர் அன்புள்ள அம்மாக்களின் தற்கொலைகளை, பாவமறியாக் குழந்தைகளின் மரணத்தை, இல்லாமற்போனவர்களால் இருப்பவர்களுக்கு சூன்யமாகும் வாழ்வை, அவர்களும் சாவு வந்து சாகும் வரைக்குமான நீளும் வெறுமைகளை, நிலையாமைகளின் நிறையேற்றுச் சுழலும் இவ்வுலக இன்மைகளை இந்த எழுத்தாளர்கள் ஏன் தான் இப்படி ரசிக்க ரசிக்க எழுதுகிறார்களோ தெரியவில்லை. படித்து விட்டு நமக்குத்தான் உயிர் பதறி உடல் நடுங்கிப் போய்கிவிடுகிறது. கொடூர மரணங்களோ அல் லது நமக்கு ஒருநாளும் வந்துவிடாக் கூடாது என்ற பதைபதைப்பை ஏற்படுத்திவிடுகிற நோயோ கதைகளாயிருக்கிறது. மொத்தத் தொகுப்பே இப்படியானதாக அமைந்து விட்டது இயல்பா திட்டமிடலா தெரியவில்லை. ஆனாலும் வாசித்து முடிக்கும் போது நமக்குள் வாழ்வு பற்றிய ஒரு பெரிய பயம் தொற்றிக் கொள்வதை உணர்கிறேன். ஒவ்வொரு கதையையும் வெகு நேரம் இடைவெளி விட்டே படித்தேன். அடுத்த கதை படித்துக் கொண்டிருக்கும் போதும் முந்தின கதையின் தாக்கமும் சோகமும் மனதை அறுத்துக் கொண்டேயிருந்தது அதன் காரணமாகவே மீட்பு கதையை தொகுப்பில் கடைசியாகவே வாசித்தேன். வாசித்து முடித்து அதிர்வடங்கும் வரை உறங்கும் என் ம
Image
கேசம் - நரன் கதைகள் முடிந்து நெடுநேரமாகியும் கலங்கும் நெஞ்சத்துடன் தொடங்கியிருக்கிறது புத்தாண்டு ... முன்பெங்கோ படித்த மாதிரி இல்லாததும் காலத்துக்கும் மறக்காதென்பதும் ஒரு சிறுகதைக்கு எவ்வளவு பெரிய வெற்றி. அப்படியான 11 சிறுகதைகளின் மொத்தத் தொகுதியாக இருக்கிறது இத்தொகுப்பு. மரணங்களும் நோய்மையும் தனிமையும் நொந்துதணியா மனமும் சுழற்றியடித்து அலைக்கழிக்கும் மனித வாழ்வின் கொடும்பக்கங்களைச் சேர்த்துக் கட்டிய கதைத் தொகுதி. ஒவ்வொரு கதை முடிவிலும் தாயின் உயிர்வாங்கிய மானேந்தி திறந்த சிலையின் கண்களும் ... அடைக்கலராஜின் கதைகள் கேட்கத் திறந்த காதுகளும் ... ஆத்தியப்பனின் புண்களாற்ற நீண்ட ஆவுடையின் கேசமும் ... மரியத்தின் மனதை எட்டிப்பிடிக்க முடியாமற்போம கணேசனின் குட்டைக் கால்களும் ... சர்க்கஸில் கூட்டம் கூட சிங்கங்களுக்கு இரையாகிப் போன காளியின் உடலும் ... ஏழு ஆண்டுகளாகியும் மகிமை தெரியும் ஒருவன் வரும் வரை தன் ஓவியத்தைக் உயிராய்க்காத்த திடமனமும் ... அம்மாவோடு இறந்துவிட்ட தன்னிருப்பை நிருபிக்க மீண்டும் மீண்டும் தீயிட்டுச் சுகம்கண்ட பல்வேறு பெண்களின் ரோமங்களும் ... தனக்கென யார