ஜி. நாகராஜன்
"மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" என்ற
ஜி. நாகராஜன் அவர்களின் வாக்கு எத்தனை அனுபவப்பூர்வமானது மற்றும் அர்த்தப்பூர்வமானது என்பதை இந்த கதைகள் நிருபிக்கிறது.

இந்தத் தொகுப்பிலிருக்கும் அத்தனை கதைகளிலும் குறைந்தது ஒரு பெண் இருக்கிறாள். அவள் சமூகம் தவறெனச் சுட்டும் ஒரு தொழிலை அதே சமூகம் செய்ய நிர்பந்தப்பந்திக்கிறது. புறத்தே நின்று அவளைக் காரி உமிழும் சமூகம் அகத்தே அவள் காலடியில் பணிகிறது. எப்போதும் தம் இச்சை தீர்க்க அவளைக் குற்றவாளியாக்கிக் குளிர்காய்கிறது சமூகம்.

ஒரு பெண் மாசுறுவதாகச் சமூகம் கருதும் அத்தனை சூழ்நிலைகளிலும் அதிலுள்ள ஆணின் பங்கை கவனியாது திட்டமிட்டே கடக்கும் போக்கைக்குறித்து பதிவு செய்திருக்கிறார் நாகராஜன்.

இது போக விளிம்பு நிலை என்பது யாரால் உருவாக்கப்படுகிறது. அதன் பின்னணி என்ன ? என்பதையும் அதற்காக இங்கே பலியிடப்படுபவர்களின் வாழ்க்கை, ஏழ்மையும் மூடமும் ஒரு சேரக்கொண்ட சமூகத்தின் சில அங்கத்தினருக்கு எதிராக அரசும் அதிகாரமும் செல்வமும் சேர்ந்துகொண்டு நடத்தும் தாக்குதல்களின் கொடுமையும் காலம் தாண்டியும் காட்சிகள் மாறாத கதைகளாக நிலைத்து நிற்கிறது.

எப்படி இந்த உலகம் சுழன்றாலும் தன் சுக வாழ்வையும் அகச் சுத்தத்தையும் மேன்மையென்றும் மகிழ்வென்றும் கருதி வாழ்வோருக்கு அதே உலகத்தில் அவரறியாமல் நிகழும் மற்றுமொரு,யாரும் சீண்டாத, அனைவரும் அசிங்கமெனப் பிதற்றும் பக்கத்தை ரத்தமும் சதையுமாகப் பிளந்து காட்டுகிறார்.

Comments

Popular posts from this blog

எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்.