மருத்துவர் கவிஞரானால் ... ❤️

தொகுப்பு முழுக்க மருத்துவரின் சமூகக் கோபமும் சக மனித அன்பும் கவிதையெனும் இலக்கிய வாசல் வழி இயல்பாய் வெளிப்படுகிறது.

நவீனம்,வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்த பெரு நிறுவனங்களின் தொழிற்போட்டிகளில் திளைக்கும் பேராசைப் பசி மனிதனின்
தொழில்,கேளிக்கை என்று நீண்டு கடைசியாக உயிர்காக்கும் மருத்துவத்தைத் தன் முழுவாய்க்குமான மொத்த உணவாக மாற்றுகிற அவலத்தைத் தன் கையறு நிலையிலிருந்து பதிவு செய்கிறார் கவிஞர்.

படிக்கப் படிக்கப் பதைக்கும் மனித நோய்மைகளின் விவரிப்புகள், அதுக்கான மருத்துவத் தேவைகளின் போதாமை, அரசின் அலட்சியம், மக்களின் விழிப்புணர்வின்மை மற்றும் ஏழ்மை,உயிரைத் தொழில்முதலாய் வைத்து லாபம் பார்க்க நினைக்கும் நிறுவனக் கொடுமைகள் என நீளும் மருத்துவ உலகின் நிழலுலகக் காட்சிகளை துறைசார் அறிவோடு நிகழ்த்தும் கவிதைக் கணங்கள் நிலையாமைகளின் காணொளியாய் விரிகிறது மனதில்.

ஒவ்வொரு கவிதைக்குள்ளும் மனிதமும் அன்பும் தமிழும் நிறையும் இந்தத் தொகுப்பு நிச்சயம் ஒரு மாற்று வாசிப்பனுபவத்தைக் கொடுக்கும்.

ஜெயமோகன் அவர்களின் வாக்கு போல "மற்ற துறை சார்ந்தவர்கள் எழுத வரும்போது இலக்கியம் இன்னும் புது எல்லைகளில் விரிவடையும்" என்பதற்குச் சாட்சி இத்தொகுப்பு.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.