கானகன் - லஷ்மி சரவணக்குமார்.

காடென்பது ஒரு பேருயிர். சின்ன சின்ன உயிர்களின் தொகுப்பே காடு. அச்சின்ன உயிர்களின் வாழ்வுக்குத் துன்பம் நேரும் போது பேருயிர் பெரும் அழிவை நோக்கிப் பயணப்படும்.

காட்டுக்குள் இருந்துகொண்டே காட்டை உயிராக நினைத்துக் கொண்டே வாழும் மனிதர்கள் சுயநலமும் பேராசையும் கொள்கிற தருணங்களில் தமக்கு எல்லாமுமாயிருந்த காட்டையே பலி கேட்கிறார்கள்.பதிலுக்குக் காடு அவர்களைப் பலி கேட்கிறது. தத்தமது வாழ்வை வேண்டிய இந்த எதிரெதிர் போராட்டமே நாவல்.

சுகவாழ்வின் முன்னால் எதுவும் பெரிதில்லையென்ற நினைப்போடிருக்கும் தங்கப்பனை இரக்கமற்ற வேட்டைக்காரன் நிலைக்கும் வாழ்வதற்கும் அறமும் நெறியும் இருக்கிறதென்பதை வாழ்வனுபவங்களால் பெறும் சடையனையும் அவன் வாரிசு வாசியையும் காட்டை நேசிக்கும் மக்களின் பிரதிநிதிகளாக நிறுத்தி சிறுபெரு விலங்குகளும் சிறுபெரு தாவரங்களும் நிறைந்த காட்டுக்குள் நடக்கும் அத்தனை அத்துமீறல்களையும் அழித்தொழிப்புகளையும் எளிய மனிதர்களின் சுகதுக்கங்களை முன்னிறுத்திக் காதலோடும் காமத்தோடும் பேசுகிறது.

இன்னும் கொஞ்சம் டீடெயிலிங் இருந்திருக்கலாமோ என்ற தோணல் நாவலின் முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரைக்குமே இருந்தது என்ற ஒரு குறையைத் தவிர காடும் காடுசார்ந்த மனிதர்களின் வாழ்வியலக் கூறும் கதை நல்ல ஒரு புதிய வாசிப்பனுவமாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.