அம்புயாதனத்துக் காளி - பிரபு கங்காதரன்

ஆனந்தத் தாண்டவம்.

மங்கையரின் மைவிழியசைவுக்கே மரித்த மனம் மலர்ந்து நிற்கும். இதில் மாகாளி உடல் திறந்திருக்கிறாள். மறுபூமியில் கூட மஞ்சம் மணக்குமென நினைக்கிறேன்.

காமமே கருவாகி காமமே மொழியாகி காமமே கவிதையாயிருக்கிறது அத்தனை உயிர்ப்போடும் அழகோடும்.

கூடற்பொழுதுகளின் புணர்ச்சி மகிழ்தலும் நிறையழிதலும் ஒரு தாந்திரீகச் செயல்பாடுபோல் உச்சகட்ட மனநிலையில் உணர்வுபொங்க வெறிகொண்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மிகநுணுக்கமான உடற்கூட்டு விவரணைகளுடனும் தேர்ந்த சொற்களுடனும் காளியென்ற உச்சநிலை எய்திவிட்ட பெண்ணுடல் மேலான காதலும் காமமும் நிறைந்து நிற்கும் தொகுப்பு.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.