Posts

Showing posts from October, 2019
Image
கசாக்கின் இதிகாசம் - ஓ.வி.விஜயன். தமிழில் - யூமா வாசுகி ஒரு கிராமத்தின் கதை கிராமத்து மக்களின் கதை ஒரு கதையை இத்தனை உயிரோட்டமாகச் சொல்லிவிட முடியுமாவென்ற வியப்புடனே தான் படிச்சுமுடித்தேன். கதைசொல்லலில் கி.ரா.வை நியாபகப்படுத்திக் கொண்டேன். ரவி என்ற ஒரு இளைஞன் ஆசிரியராகப் பொறுப்பேற்கும் கசாக் என்ற கிராமத்தில் வசிக்கும் சாதாரண மக்களின் இன்பதுன்பங்கள் நிறைந்த வாழ்க்கையப் இதிகாசமாகப் பதிவு செய்திருக்கிறார் திரு. ஓ.வி.விஜயன். இந்நாவலின் முக்கியச் சிறப்பாகப் போற்றப்படுவது இதன் பேச்சு வழக்கு மொழிநடை, ஒட்டுமொத்த கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் கொஞ்சமேனும் தொட்டு சென்றது. இதிகாசம் என்ற பெயரைத் தேர்ந்தது எத்தனை அர்த்தமானதென்று நாவல் முடியும் தருவாயில் நம் மனம் கனக்கும் நிகழ்வுகளிலிருந்து விளங்கப் பெறலாம். தன் தந்தையின் இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட மீறலுறவில் மனம் கலங்கி வீட்டைவிட்டுப் புறப்பட்டு ரவி கசாக்கிற்கு ஓராசியர் பள்ளியைத் துவங்கி நடத்த வருகிறார். அங்கு ஏற்கனவே இருக்கும் முகமதிய வேத பாட சாலைக்கும் ஒரு தனியார் ஆங்கிலவழிப் பள்ளிக்கும் இந்த ஓராசியர் பள்ளி ஒரு வருமானப் பிரச்சினையாக உருவெ
Image
புதுமைப்பித்தன் ...  ❤️ வைரமுத்து (ஓரளவு முழுக்க),சுஜாதா (சிறுகதைகள், கேள்வின்- பதில்கள்),விகடன் (2.50 ரூ விற்ற காலத்திலிருந்து),எஸ்.ரா (கட்டுரைகள்) வாசித்துவிட்டு அடுத்ததா அதிக இடைவெளிவிட்டு மீண்டும் வாசிக்கத் தொடங்கலாமென்று நான் போய் வாங்கிவந்த இரண்டு புத்தகங்கள் 1.புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு (ஜெயகாந்தனின் பின்னட்டைப் புகழுரையைப் படித்துவிட்டு) 2.சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுப்பு (புளியமரத்தின் கதை நோபல் தகுதிக்கென்ற ஒருவரிக் குறிப்பைப் படித்துவிட்டு) இதில் புதுமைப்பித்தன் சிறுகதைகளைத்தான் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன். அந்த புத்தகம் என்னை இலக்கிய வாசிப்பை நோக்கி மிகவுமாக உந்திய புத்தகம். அந்தக் கதைகள் ஒரு பெரும் வியப்பையும் உற்சாகத்தையும் வாசிப்பின் சுகத்தையும் சுவாரசியத்தையும் எனக்கு அளித்தது. இதுவரைக்குமாக உண்மையாகச் சொல்லப்போனால் அப்படியான வியப்பை எனக்கு எந்தச் சிறுகதை ஆசிரியரும் வழங்கி விடவில்லையென்பது சோகமே. பிடித்தத்துக்கான காரணங்கள் சில 1. அவருடைய கதைகளுக்கான கரு அதற்கு முன் பேசப்படவில்லையென்ற ஆய்வு. (அவரே அனைத்திற்கும் இன்றுவரை முன்னோடியாக இருப்பது) 2