Posts

Showing posts from November, 2019
Image
நடுகல் - தீபச் செல்வன்  ஆலயத்தின் படிக்கட்டுகள் முழுக்க அம்மாவின் பிரார்த்தனைகளே கொட்டிக் கிடக்கின்றன. - நாவலிலிருந்து ஒரு வரி. அதே போல் தான் வரலாற்றின் வழி நெடுக இழப்பின் வலிமிகுந்த கதைகளே கொட்டிக் கிடக்கின்றது. கண்ணீரைத் துடைக்க நீளாத எம் கைகளில் வைத்து அக்கதைகளில் வரும் அதிகாரத்தின் கொடுங்கோலர்கள் நிகழ்த்திய மனிதத் தன்மையற்ற செயல்களை உச்சுக்கொட்டிக் கொண்டு வாசிப்பதைத் தவிர வேறென்றும் அறியோம். யுத்தத்துக்கு நடுவில் சிதையும் ஒரு குடும்பத்தின் கதை. ஒரு குடும்பமும் ஒரு நாளும் ஒன்றாய்க் கூடி மகிழ்வாய் வாழாத கதை. எறிகணைகளுக்கு நடுவில் துரத்தப்பட்டும் வழியில் கொல்லப்பட்டும் மிச்சமுள்ளோர் முள்கம்பிகளுக்குள் முடக்கப்பட்டும் விவரிக்க இயலாத் துன்பங்களுள்ளும் கழியும் கதை. ஒரு போட்டோவைக் கூட அவ்வளவு ஏன் ஒரு கல்லைக்கூட தம் மகனின் நினைவாகவோ உருவமேற்றோ அருகே வைத்துக் கொள்ள முடியாத ஒரு கொடுமையையெல்லாம் எம் மக்கள் அடைந்திருக்கிறனர் என்று படித்துத் தெரிந்துகொள்கையில் ஈழ மக்கள் அடைந்ததும் கடந்ததும் சொல்லில் சொல்லி மாளாதவைகளே. தலைக்கு மேல் தலையிருக்கிறதா என்று தினமும் தொட்டுப் பார
Image
பொசல் - கவிதா சொர்ணவல்லி நிறைய காதல் நிறைய கனவுகள் விரும்பாத் திருப்பங்கள் முடிவாகக் கண்ணீர் அழகான அம்மாக்கள் அன்பான ஆச்சிகள் உரிமையான உறவுகள் உன்னதமான ஊர் தரம் பிரிக்கும் சாதி தலைகேட்கும் வீராப்புகள் காக்கும் கடவுள்கள் சாகசம் காட்டும் மாயசக்திகள் கைகொடுக்கும் நம்பிக்கைகள் காலமாற்ற மனப்பான்மைகள் என ஒரே அமர்வில் வாசித்து முடித்துவிடகூடிய எளிய மொழியிலான 10 கதைகள். நெருங்கிய உறவுகள் மட்டும் சூழ ஒரு சிறு கூட்டிற்குள்ளிருந்து கல்வி, வேலை என்ற சிறகுகள் விரிய மனமின்றி நகரம் நாடிவந்த பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் மேற்கண்ட நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கும் பார்வையைத் தொடராகப் படித்ததைப் போன்ற உணர்வு. ஒரு பயணத்தில் வாசிக்க வாய்த்தால் சுகம்.