Posts

Showing posts from May, 2020
Image
நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குரூர் தமிழில் - கே.வி.ஜெயஸ்ரீ இரண்டு மிகப்பெரிய ஆச்சரியங்கள் இந்நாவல் வாசிக்கையில் ... ஒன்று தமிழரின் சங்ககால வாழ்வைப் பேசும் இந்த நாவலை இன்றைய மலையாளி ஒருவர் மலையாளத்தில் எழுதியிருக்கிறார். இராண்டாவது மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பென்று ஒருபோதும் நம்பிவிட முடியாததும் முதலில் மூலமாகத் தமிழிலேயே தான் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று நம்பும்படியாகவும் செய்திருக்கும் அற்புதமான மொழிமாற்றம். மன்னனைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்வு நடத்தும் பாணர் மற்றும் கூத்தர் குலத்தின் புலமையும் வறுமையும் ஒன்றுக்கொன்று இணைந்தே தொடரும் வாழ்வியலைச் சொல்ல ஒரு பாணர் குழுவின் இடப்பெயர்ச்சியில் தொடங்கும் கதை ஒரு குடும்பத்தில் மையம் கொண்டு அக்குடும்ப உறுப்பினர்களான தலைவன் - கொலும்பன், மகள்கள், மகன்கள் , நண்பர்கள் ஆகியோரின் அறிவு, புலமை, திறமை, காதல், களவு, துரோகம், வலி, ஏமாற்றம், கடைசியாக தப்பித்தலுக்கான வழியாக நாடுவிடுதலும் எதிர்பாரா மரணமும் என்று படர்ந்து பிரம்மாண்டமான வரலாற்றின் ஊடாகப் பல கிளைகளாக விரியும். மூவேந்தர்கள், அதியமான், நன்னன், வேள்பாரி போன்ற மன்னர்களின் கொடைத்
Image
விதானத்துச் சித்திரம் - ரவி சுப்பிரமணியன் இத்தொகுப்பின் கவிதைகள் விழிவழிப்படும் காதலை இந்த முறை விதிவழிப்படும் வாழ்வை புலம்பித் தீர்க்க வேண்டிப் பிரார்த்தனைக்கு வரும் பிரகாரத்துக்குள் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. தலைவனின் அகத்துடிப்பான காதலையும் காமத்தையும் நட்பையும் அழகியலையும் சுயமதிப்பீட்டையும் புறத்துடிப்பான சமூகக்கோபத்தையும் அரசியற் பிழைகளுக்கெதிரான தன் மறுப்பையும் என நீளும் எல்லாவற்றைய ும் கருகித் தாழும் திரிகளைத் தூண்டி விட்டுக் கொண்டும் மலரத் தொடங்கும் மலர்களை மண் கொள்ளும் முன் சேகரித்தெடுத்துப் படைத்துக் கொண்டும் சுருதி குழையும் தன் வீணையோடு விரல்களால் உரையாடிக்கொண்டும் தெப்பங்குளங்களில் உயிர்வாழும் சிறுமீன்கூட்டங்களுக்குப் பொரியுணவு வழங்கிக் கொண்டும் பிரகாரத்துக்குள் கவியும் மங்கிய ஒளி தன்மேல் விழுந்து ஒளிர ஒளிர மனம் மகிழ மகிழ அழகாகிக் கொண்டே இருக்கும் தலைவி தனதாக்கிக் கொள்ளும் கவின்கணங்களே இக்கவிதைகள். முதுமொழியின் பழைய வார்த்தைகளில் புதுக்களத்தில் பயின்று வரும் கவிதைகள் புதியதும் சுகமானதும் நெடுநாள் நினைவிலிருத்திக் கொள்ளும் வாசிப்பனுபவத்தை வழங்குகிறது.
Image
மிளகு, பருத்தி மற்றும் யானைகள்  -  நரன் கவிதை எத்தனை நீளமாயிருந்தாலும் பொருளென்பதும் உணர்வென்பதும் சில சமயம் ஒரு வரி தானே. அப்படியான வரிகளால் நெஞ்சம் நிறைக்கும் தொகுப்பு.
Image
சித்தன் போக்கு - பிரபஞ்சன் நன்மை மரம் நல்கிய நறுமலர்கள் ...  ❤️ "அவனுக்கு என்ன கஷ்டமோ ?" என்று அடுத்தவனின் நிலை நின்று யோசிக்கத் தொடங்கும்போதே பாதியாகி விடுகிற பிரச்சினைகளின் வீரியம் "சரி விட்டுக் கொடுப்போம் !" என்று கடக்கிற போது முழுவதுமாக கரைந்து போய்விடுகிறது. இந்தத் தொகுப்பின் கதைகள் முழுக்க அல்லது பிரபஞ்சன் அவர்களின் கதையுலகம் முழுக்க மனிதர்களின் மனதுகளின் நன்மைப் பக்கங்களை மட்டுமே திரும்ப திரும்ப எழுதி மகிழ்ந்திருக்கிறது. சல்லிப் பயல்களுக்குள்ளும் இருக்கும் சௌந்தர்யங்களை சலிப்பின்றித் தேடிக் கண்டடையச் சொல்கிறார். அதை மட்டுமே ஏற்றுக் கொண்டு எதிர்காலங்களில் நடைபோடச் சொல்கிறார். முதல்வரியிலிருந்தே நல்லவன் அல்லது கடைசி வரியில் திருந்தும் கெட்டவன் என அவரவர் வாழ்வின் சந்தர்ப்பங்களுக்கேற்ப விதவிதமான பிரச்சினைகளுள்ள எளிய மனிதர்களைப் படைத்திருக்கிறார். அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பும் புரிதலுமே தீர்வாகுமென்ற தீர்க்கத்தையும் கதை முடிவுகளாகக் கொடுத்திருக்கிறார். நான் முதன்முதலாக பிரபஞ்சன் அவரை வாசிக்கிறேன். சுந்தர ராமசாமி அட்டையில் " கலை வெற்றியை உறுதிப்படுத்து
Image
பொன்னியின் செல்வன் -  க ல் கி நந்தியைத் தொழுது நாயகனை வழிபட ... 🙏 கதையின் கைபிடித்துக் கடப்பவர்கள் நேசிக்கிறார்கள் கடலையும் வெற்றி தோல்விகளின் வஞ்சகக்கணக்கே வரலாறென்றானபின் பற்றிக்கொண்டவரின் ரத்தமும் படிந்திருக்கும் கூற்றெனும் கூர்வாளின் முனையில். மகுடங்களெனும் வலிமையான ஆயுதங்கள் உலையில் கொதிக்கும் போதே எதிரிகள் உருவாகத் தொடங்கி விடுவார்கள். ஒரு பெரும் அற்புதம் நிகழ்ந்து முடிந்த சிறுகண மகிழ்வுடன் ... 😊 அமரர் கல்கியின் அறிவுத் திருவடி தாழ்ந்து வணங்குகிறேன்..  🙏 .
Image
ஒருவீடு பூட்டிக் கிடக்கிறது -  ஜெயகாந்தன் மனிதனே ரொம்ப பழமையான உலோகம் தான். காலம் தான் அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்கிறார்கள். - ஜெயகாந்தன் இந்த அனுபவ ஞானமே "ஒருவீடு பூட்டிக் கிடக்கிறது" என்ற ஜெயகாந்தனின் தேர்ந்தெடுத்த தொகுப்பான இந்த 17 கதைகளிலும் கதைசொல்லும் நீதியாக தெளிந்து நிற்கிறது. இக்கதைகள் முன்வைக்கும் முற்போக்கு எழுதப்பட்டு வெள ிவந்த காலம் திகைக்க வைக்கிறது. இன்றும் இக்கதைகளுக்குள்ளிருக்கும் பிரச்சினைகளுக்காக முன்வைக்கப்படும் விவாதங்களும் தீர்வுகளும் சற்றே புரட்சி மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் சமூக விதிகளை உடைத்து மானுடம் காக்கும் முயற்சிகளாகவே தோன்றுகிறது. நாம் அவைகளை காலமாற்றத்தின் காரணமாகவும் அறிவுப்புலத்தின் ஆக்கச் செயல்களாகவும் ஏற்றுக் கொள்ளலும் புரிந்துகொள்ளலும் நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளும் சிறுபணியாகும். ஏற்க மறுப்போமாயினும் நம் மனங்களின் நீங்காக் களைநீக்க ஜேகேயின் பேனா முயன்று கொண்டே இருக்கும். ஏனென்றால் அதுவே அவர் எழுத்தின் நோக்கம்.
Image
ஏழு தலைமுறைகள் , அலெக்ஸ் ஹேலி. வெள்ளைக்காரன் எங்க போனாலும் முதல்ல கோர்ட் கட்டுவான். சட்டங்கள இயற்றி அடிமைகள உருவாக்க. அதன்பிறகு மாதா கோவில் கட்டுவான். நான் கிறித்துவன்னு சொல்லிப் பரப்ப. - ஏழு தலைமுறைகள் , அலெக்ஸ் ஹேலி. (வெள்ளைக்காரன்னா பிரிட்டிஷ் மட்டுமல்ல. சிவப்பு நிறத்தவர்கள்.) இந்த இரண்டும் ஏழு தலைமுறைகள் நாவல்ல மட்டுமல்ல உலகம் முழுக்கவும் நடந்திருக்கு. குறிப்பா நாவல்ல நிறத்துக்கு ஒரு சட்டம்னு ஒருசார்புடைய சட்டங்களின் மூலமா கறுப்பின மக்கள பல நூறாண்டு காலமா பல தலைமுறைகளா அடிமையா வச்சிருந்தாங்க. இரண்டாவதா முந்தைய தலைமுறைகளில் வேற்று மதமா இருந்தவங்க இன்னத்த தலைமுறைல கிறிஸ்துவ மதமா மாற்றிருக்காங்க. நாவலாசிரியரின் தன் முந்தைய தலைமுறைகளைத் தேடிச் சென்று கண்டடைந்த பின்னோக்கிய பயணமா நாவல் எழுதப்பட்டிருக்கு. சாதரணர்களாக சந்தோசமிக்க வாழ்க்கைய வாழ்ந்துகிட்ட இருக்கிற ஒரு கிராமத்துக் குடும்பத்துல ஒரு இளவயது பையனா குண்ட்டா வெள்ளையர்களால் அடிமையாக்க வேண்டி கடத்தப்படுகிறான். அங்கிருந்து நீளும் கதை நாவலாசிரியரின் தாத்தாவான கோழி ஜார்ஜின் காலம் வரை தொடர்ந்து ஐந்து தலைமுறைகள் வெவ்வேறு முதலாளிகளிடம
Image
பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவம் "நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளி பாய்ச்சுகிறது" என்று இந்தப் புத்தகத்தின் பின்னட்டையில் ஒருவரி இருக்கிறது. இத்தனை நாளாக நாம் கற்றறிந்த அல்லது கேட்டறிந்த நம் தகவலறிவு என்றும் கேள்விகளோடோ அல்லது கண்மூடித்தனமாக நம்பும் உலக உண்மைகள் என்றும் கைக்கொண்டிருக்கும் அத்தனை அகபுற இருள்களின் மீதும் தொ.ப.தனது நூலாய்விலும் களஆய்விலும் ஆய்ந்து பெற்ற அபார  அறிவாற்றலைக் கொண்டு வெளிச்சம் வீசி புத்தொளி பாய்ச்சுகிறார். இத்தனை ஆண்டுகளாக என்ன முறையிலான வாழ்வை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ? எத்தனையோ தலைமுறைகள் மாற்றி நம் கைவந்து சேர்ந்திருக்கும் நம்பிக்கைகளையும், சமய கட்டமைப்புகளையும், வழிபாட்டுச் சடங்குகளையும், சமூகப் பொருளாதார இசங்களையும் பின்பற்றித்தானே... ஒரு நாளாவது நாம் மேற்சொன்னவைகளின் உண்மைத்தன்மைகளைக் குறித்தோ வரலாற்று நிறுவல்கள் குறித்தோ பயன்படுத்தும் பொருட்களின் பயன்பாட்டுத் தொடர்ச்சி குறித்தோ நாம் யோசித்திருக்கிறோமா? இல்லை ஒரு படி மேலே போய் அத்தனையையும் ஆய்விற்குப்படுத்த வேண்டுமென்று தோள் நிமிர்த்தித் துணிந்திருக்கிறோமா ? இ
Image
காலம் உறைந்த சட்டகம் - தமிழ்நதி "தனக்கு வலிக்கும் வரை மற்றவர்களின் வலி என்பது நமக்கு ஒரு தகவலே" என்ற ழாக்'கின் அழியாப் பெருவாக்கியம் போல உலகின் போதாமைக்காலத்தில் உங்களின் போதாமைக்காலத்தை "காலம் உறைந்த சட்டகம்" கவிதைகள் வழி அறிந்து கொண்டிருக்கிறேன். கவிதை என்பது உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் போது மனதிற்கு மிக நெருக்கமாக வந்துவிடும் என்பதை தங்களின் ஒவ்வொரு கவிதையும் நிருபிக்கிறது. அதுகோர ும் திறப்புக்கு நாம் உள்ளத்தளவில் முன்தயாரிப்புகளோடு தட்டும் போது கவிதை ஒரே தட்டலில் திறந்தும் கொள்கிறது. இத்தொகுப்பின் கவிதைகளையெல்லாம் எழுதிய காலகட்டத்தில் உங்கள் மனதின் அலைச்சலை எண்ணிப் பார்க்கிறேன். போரென்ற பொய்முகத்திரையோடு ஒரு இனமே அழித்தொழிக்கப்பட்ட வன்கொடுமைகளை நேர்கண்ட போது முதல் முறையும் எழுதிய போது இரண்டாவது முறையும் உள்ளழுத்தி உயிர் வலிக்கச் செய்திருக்குமென நிச்சயமாக உணர முடிகிறது. அரசியல் அதிகார அமைப்பின் ஒவ்வொரு அசைவும் ஒரு தனிமனித மனதை எப்படி அசைத்துப் பார்க்கிறதென்ற பார்வையில் பார்க்கிற போது தமிழீழப் போர் இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் பெரும் உயிரிழப
Image
குற்றத்தின் நறுமணம் -  வெய்யில் நீங்கள் எதை வேண்டுமாயினும் தின்னுங்கள் நானோ என் பன்றிகளுக்கு ரோஜாக்களையே தருவேன் - வெய்யில்.