கசங்கல் பிரதி - யூமா வாசுகி

தமிழின் தன்னிகரகற்ற கவியோடு சில நாட்கள்.

என் வாழ்வில் நினைத்து நினைத்துச் சுகிக்குமளவுக்கான உன்னதக் கவிதைப் பொழுதுகள்.

மனம் முத்திய நிலை பித்தென்று சொல்வார்களே அதுவும் மூத்து இதில் கவிதையாகிருக்கிறது.

இத்தொகுப்பின் வாசிப்பை ஒரு பேரனுபவம் என்றுதான் என்னறிவிற்கு இதை வரையறுக்க முடிகிறது. கைவர மறுக்கும் வாழ்வின் நுண்ணிய தளங்களையும் ஊடறுத்துக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதைகள்.

மூன்றாம் பாகமான காதல் உயிர்கொள்ளும் கவிதைகள் பெண்ணீர்ப்பை ஒரு வழிபடல் போல நிகழ்த்திக் காட்டுகிறது.

வாசித்து முடித்த நொடியில் உட்சபட்ச மனவெழுச்சியில் நின்று சொல்கிறேன் ..
என் வாழ்நாள் முழுமைக்குமான நான் வாசித்ததில் என் விருப்பக் கவிதைத் தொகுப்புகளில் ஒரு தொகுப்பாக இத்தொகுப்பு இருக்கும்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.