
முகுந்த் நாகராஜன் கவிதை கள் ஒரு சிறு புன்முறுவலைத் தன் அத்தனை கவிதையிலும் ஒளித்து வைத்திருக்கிறார் கவிஞர்.முகுந்த் நாகராஜன். கவிதை முடியும் வரியில் நிச்சயம் அதை கண்டடையச் செய்கிறார். நாமும் புன்னகையோடே அடுத்த கவிதை நோக்கி நகர்கிறோம். குழந்தைகளின் உலகத்தை நிறைய எழுதியிருக்கிறார். எளிய மனிதர்களைத் தன் கவிதைகள் முழுக்கப் பதிவு செய்து உலவ விடுகிறார். சித்தாள் சேலை காயப்போட்ட இடம் இன்று பெருநிறுவன கட்டிட்டத்தின் நியான் போர்டு தொங்குமிடமென்ற கவிதை எதார்த்த உலகத்தின் நேரடிச் சாட்சி. புரியும் கவிதைகளை நவீன கவிதைகளாக நிலைபெறச் செய்திருக்கிறார் என்று ஒரு விமர்சனம் படித்தேன். நூறு சதவித உண்மையென்று அவரின் கவிதைகளைத் தேடித்தேடிப் படிக்கையில் உணர்கிறேன். இத்தனை தாமதமாக அவரை வந்தடைந்ததற்கு வருந்துகிறேன்.