பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்- மயிலன் ஜி சின்னப்பன் காரணம் தெரியாத மரணமொன்றின் பலியாய் மறைந்த ஆளின் கதையொன்று எங்கள் வீட்டிலும் இருக்கிறது. நேற்றைக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கழிந்த அவனின் மரணக்காரணம் இன்றைக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேலைக்குப் போன இடத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டானென்ற முதல் தொலைபேசி எனக்குத்தான் வந்தது. உயர் சிகிச்சைக்கு வேண்டி (உயிர் இருக்கிறதா என்றறியாத மர்மங்களுடன்) தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றும் செய்தி எனக்குத்தான் முதலில் சொல்லப்பட்டது. எத்தனையோ முயன்று பார்த்து விட்டோமென்றும் நாங்கள் அளிக்கும் மருத்துவத்தை அவனது உடல் ஏற்க மறுத்துவிட்டது என்ற பூடக மொழியில் ஆள் செத்துப் போய்விட்டானென்ற துக்கச்செய்தியும் அரசு மருத்துவமனையில் 8 மணி நேரக் காத்திருப்புக்குப் பின் முதன் முதலாக எனக்குத்தான் சொல்லப்பட்டது. பொட்டலமாய்க் கிடைத்தவனை குழிக்குள் இறக்கி வைத்து கடைசியாக முகம் பார்ப்பவர்கள் என்ற வரிசையில் முதல் ஆளாக நின்றதும் நான் தான். ஆனால் அவனின் மரணம் ஒருபோதும் தற்கொலையல்ல என்ற தீர்க்கமான முன்முடிவுட...
Popular posts from this blog
கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.
கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார். புதியதொரு வாழ்வனுபவம் .... நான் வாழும் சூழலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்க்கைய கற்பனையாக வாழ்ந்து பார்த்திட வேண்டுமென்ற ஆசையில் தான் நான் பெரும்பாலும் வாசிக்கவே செய்கிறேன். தொடர்ந்து அவ்வகை அனுபவங்களைக் கொடுக்கும் புத்தகங்களையே தேர்வு செய்து வாசித்தும் வருகிறேன். அப்படியான வகையில் மலையை நம்பி மலைக்கு மேலேயும் கீழேயும் வாழும் மக்களின் வாழ்வியலைப் பற்றிய இந்தக் கதை அம்மக்களோடு ஒருவனாக அவர்களின் நல்லது கெட்டதுகளை மலையிலும் தரைக்காடகாட்டிலிருந்து கழுதைகளோடு பயணப்பட்டுக் கொண்டே கிட்ட இருந்து பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது. சாதியத்தின் கீழ்மைகளும், சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் விளையும் ஏகாதிபத்திய - அடிமை மனோபாவ இயல்புகளும் பெரும் உருவெடுத்து நின்றாடிய காலத்தைத்தான் பழையகாலம் என்பதை, எந்த மறுமலர்ச்சிப் பாதைகளும் கண்டடைந்திராத, எந்த பொதிச்சுமையும் குறைந்தடாத கழுதையினும் தாழ்ந்தபடி வாழும் இக்காலத்திலும் நம்ப மறுக்கிறது மனம். வருடத்துக்கு ஒரு முறை தானென்றாலும் மணிக்கணக்கில் காத்திருந்து உண்ணும் இட்லிக்குக் கொஞ்சம் கூடுதலாகச் சாம்பார் கேட்டவர்கள் மீத...
பிடிமண் - முத்துராசா குமார்
"1 ரூபாய் சூடத்தீ உடம்பு" இந்த ஒரு வரியை எப்படிச் சிந்தித்திருப்பார் என்றே இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். காலம் முழுக்க மறக்காது இந்த வரி. மரபுக்குத் திரும்புதலை ஒரு பேஷன் போல ஆபாசமான வர்த்தகமாக மாற்றத் தொடங்கி அவலமாய்ப் பைநிறைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் உண்மையாகவே மரபென்பது பழமையைக் கொண்டாடுதல் அல்ல கைமாற்றுவதுதான் என்பதை நாம் இன்று இழந்து நிற்கும் நிலம், பண்பாடு , கல்வி, கலை, வழிபாடு, விவசாயம், உள்ளிட்ட அனைத்தின் அழிவிலும் கண்டுகொள்ளலாம். அந்தப் பூர்வீக நினைவுகளை சூடு குறைந்த பின்னும் சொத்தென்று கைப்பற்றியிருக்கும் பிடிமண்ணில் பதியமிட்டுருக்கிறார்
Comments
Post a Comment