
சுமித்ரா - கே.வி.ஷைலஜா சுமித்ரா என்ற நாவலைத் தன்னிடம் அறிமுகப்படுத்தி அந்நாவலிலிலிருந்து ஜெயமோகன் சொன்ன ஒருவரிதான் நாவலை வாசிக்க வேண்டுமென்றும் வாசித்து முடித்தும் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் தூண்டியது என்றும் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா முன்னுரையில் கூறியிருக்கிறார். அதேபோல் ... "மற்ற உடல்களில் இருந்துகொண்டு சின்னச்சின்ன சாயல்கள் வழியே சுமித்ரா அவனை தினம் தினம் வழி நடத்தினாள்". என்ற இந்த ஒரு வரிதான் இந்த நாவலை என் வாழ்நாள் முழுமைக்குமாக வாசிப்பின் பெரும்பேறாக மாற்றியிருக்கிறது. முதல் பக்கத்திலேயே இறந்து போகும் சுமித்ராவை அவர்தம் கணவரின், மகளின், உறவுகளின், வீட்டுப் பணியாளர்களின், அயல்வாசிகளின், தோழிகளின், நெருங்கிய நண்பர்களின், ரகசிய சினேகிதரின், நினைவுகளின் வழியே ஒவ்வொரு வரியிலும் தன் கவித்துவ எழுத்தால் உயிரோடுலவச் செய்திருக்கிறார் கல்பட்டா. சுமித்ராவின் பாதம் முதல் தலை வரை உடல் முழுதும் ஒவ்வொருவரின் பார்வையிலும் வணங்கவும் வர்ணிக்கவும் படும்போது மனம் என்ற ஒன்றைப் பற்றிப் உணரப்படவோ நினைக்கப்படவோ இல்லாமல் போவதில் எத்தனை பெரிய துர்பாக்கியம். உடல்தவிர்த்த வா...