பீஃப் கவிதைகள் - பச்சோந்தி பச்சோந்தி.
எனக்குப் பழக்கமில்லையென்று தான் நான் ஒரு உணவைச் சாப்பிடாமல் தவிர்க்கிறேன். ஆனால் அதை விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனைத் தடுக்கச் சட்டமெல்லாம் போட்டு சாப்பிடக் கூடாதென்று கட்டாயப்படுத்தப்படும் போது நானுமே அச்சட்டத்தை மீறுவது பிழையொன்றுமில்லை. ஏனென்றால் உணவு அவனவன் விருப்பம்.
ஒரு உணவுக்கிருக்கும் நம் வாழ்வோடான பல்வேறான தொடர்புகளையும், நம் உணவை நாம் தேர்ந்தெடுப்பதில் பொதுச் சமூகத்திடமிருந்து வரும் விருப்பு வெறுப்புகளையும் ஏளனங்களையும் அது உட்கொண்டிருக்கும் சமூக அரசியல்க் காழ்ப்புகளையும் நிதானித்துப் பார்க்கச் செய்திருக்கிறது.
உணவரசியல் குறித்த பரந்து விரிந்த பார்வைகளோடு இன்னுமே காத்திரமாகவும் கச்சிதமாகவும் வந்திருக்க வேண்டிய படைப்பு. காலம் வாய்ப்பளிக்கும் போதே வரலாறை நிகழ்த்திட வேண்டும்.ஆனாலும் கருத்துரிமை எதிர்ப்புகளும் பிரிவினைவாதங்களும் தம் வன்முறைக் கொலைவாளேந்தி நிற்கும் இக்காலகட்டத்திற்குத் தேவையானதும் முக்கியமானதுமான முன்வைப்பு.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.