பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்- மயிலன் ஜி சின்னப்பன் காரணம் தெரியாத மரணமொன்றின் பலியாய் மறைந்த ஆளின் கதையொன்று எங்கள் வீட்டிலும் இருக்கிறது. நேற்றைக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கழிந்த அவனின் மரணக்காரணம் இன்றைக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேலைக்குப் போன இடத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டானென்ற முதல் தொலைபேசி எனக்குத்தான் வந்தது. உயர் சிகிச்சைக்கு வேண்டி (உயிர் இருக்கிறதா என்றறியாத மர்மங்களுடன்) தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றும் செய்தி எனக்குத்தான் முதலில் சொல்லப்பட்டது. எத்தனையோ முயன்று பார்த்து விட்டோமென்றும் நாங்கள் அளிக்கும் மருத்துவத்தை அவனது உடல் ஏற்க மறுத்துவிட்டது என்ற பூடக மொழியில் ஆள் செத்துப் போய்விட்டானென்ற துக்கச்செய்தியும் அரசு மருத்துவமனையில் 8 மணி நேரக் காத்திருப்புக்குப் பின் முதன் முதலாக எனக்குத்தான் சொல்லப்பட்டது. பொட்டலமாய்க் கிடைத்தவனை குழிக்குள் இறக்கி வைத்து கடைசியாக முகம் பார்ப்பவர்கள் என்ற வரிசையில் முதல் ஆளாக நின்றதும் நான் தான். ஆனால் அவனின் மரணம் ஒருபோதும் தற்கொலையல்ல என்ற தீர்க்கமான முன்முடிவுட...
Popular posts from this blog
ராக்கெட் தாதா - கார்ல் மார்க்ஸ் இந்தத் தொகுப்பை ஏன் நிறைய பேர் பரிந்துரை செய்தார்களென்ற விளக்கத்துக்கு சில கதைகளே பதிலாகப் போதுமென்றிருக்குறது. நிழல் என்ற கதையைத்தான் முதலில் படித்தேன். மனதில் மிகவும் பாதிப்பை உண்டாக்கிவிட்டது அந்த ஒரு கதையே. மொத்தத் தொகுப்பின் முழுப்பதமறிய அந்த ஒரு கதையே போதுமாயிருந்தது. கதை முடியும் போது சந்திராவுக்காகவும் இறந்துவிட்ட அவரின் மகனுக்காகவும் கண்ணீர் துளிர்த்திர ுந்தது. சித்திரங்கள் - நாம் இழந்து வரும் அல்லது நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நமக்கு சகஜமாக்கப்பட்டு வரும் குடும்ப உறவின் சிதைவுகளை அத்தனை நிகழ்கால உண்மைகளோடும் உளவியலோடும் கூறுகிறது. பெண்ணின் மீறல்களுக்கு கேள்வி கேட்கும் ஆண் மனம் ஆணின் மீறல்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வியை நம்முள் ஏற்படுத்தி முடிகிறது கதை. சுமை - ஒரு முக்கோணக் காதல் கதை முடிவில் ஒரு பச்சிளங்குழந்தையின் மறைவில் ஒரு மிகப்பெரிய இழப்பையும் குற்றத்தையும் கைக்கொண்டதில் ஒரு ஒழுங்கான வழிக்கு வரும் போது உண்மையான காதல் சிறைக் கம்பிகளுக்கிடையில் துளிர்க்கிறது. கிறக்கம் - சாராயம் குடிப்பதின் சல்லாபப் பக்கங்களை பெரும் நகை...
இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன். கதைகளின் மாயக் குடுவை. ஔரங்கசீப்பின் இறுதி நாட்களில் நோய்மையால் ஏற்படும் தளர்வைக் கண்டு அவரே அச்சமுறுவதில் ஆரம்பிக்கும் கதை அவரின் வாரிசுகள், அவரின் மறைவுக்குப் பிறகாக நடத்தும் அதிகாரப் பசிக்கான சண்டைகள், அஜ்யா என்ற ஒருவர் அரசருக்கு நெருக்கமான பணியாளின் வாழ்வு அரசரின் ரகசியங்களறிந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கொடுமைக்குள்ளாக்கித் தீர்க்கப்படுவதும்,தூமகேது என்ற சாதாரணண ின் வாழ்வு ஒரு புத்தியில்லா மன்னனின் கேடுகெட்ட ஆட்சிமுறையால் பாதிக்கப்பட்டு, அனாதையாக்கப்பட்டு, கடைசி காலம் வரை பல சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டு குடும்பத்தைப் பிரிந்து வாடும் துர் நிலைக்குத் தள்ளப்படுவதும், பிஷாடன், சனத், சிகிரியர், குலாபி, பறவை மனிதன், என்றோர் பலரின் வாழ்வென புரட்ட புரட்ட பக்கங்கள் தோறும் கதைகள் விரிந்துகொண்டே இருக்கிறது. சிறியதும் பெரியதுமான அத்தனை கதைகள் நிறைந்துள்ளது புத்தகம் முழுவதும். பல கிளைக்கதைகளை ஒரு முக்கியக் கதைக்குப் பக்க பலமாக அடுக்கிக் கொண்டே போகிறார் ஆசிரியர். வாசிப்பின் போது இது யாருடைய கதை என்ற குவியத்தில் நிலைபெறாமல் போகும் அயர்ச்சியைத் தாண்டி இது உலகம் முழுக...
Comments
Post a Comment