ருசம் ஞாபகமில்ல.ரொம்ப சின்ன வயசுல என் பெரியப்பா வீட்ல லக்ஷ்மி அவர்கள் எழுதிய கௌரின்னு ஒரு நாவல். பழைய நாவல். அத வாசிச்ச்தது தான் என் முதல் வாசிப்பனுவ ஞாபகம். கதை கூட இப்ப கொஞ்சம் தான் ஞாபகமிருக்கு. பிற்பாடு சினிமா மேல இருந்த ஆர்வத்துல விகடன் குமுதம்னு பல வருசம் வாசிப்பு தொடந்தது. 11 ம் வகுப்பு படிக்கும் போது கோடை விடுமுறைல என் ஆசிரியர் எனக்கு படிக்கக் கொடுத்த நாவல் வைரமுத்துவின் தண்ணீர் தேசம். அதிலிருந்த காதலுக்காகவே பல தடவ வாசிச்சு சிலாகிச்சு அத முழுசா முடிச்சிட்டு இன்னும் நிறைய வாசிக்கனும்னு பேரார்வத்தோட அங்கிருந்து தொடங்குனதுதான் தீவிர வாசிப்பு. சுமார் 15 ஆண்டுகாலமா வாசிக்கிறேன்.

ஆனாலும் இத்தனை வருச காலமா நான் அபுனைவுகள படிச்சதே இல்ல. எஸ்.ராவின் விகடனில் வந்த ஒன்றிரண்டு கட்டுரைத் தொகுப்புகளைத் தவிர. மற்றபடி ஒரே ஒரு கட்டுரைத் தொகுப்பு கூட என் வீட்ல இல்ல. நான் வாங்கி வாசிக்க ஆசைப்பட்டதும் இல்ல. அப்படி புனைவே படிக்காம கட்டுரை புக்காப் படிப்பவங்களை நான் கிண்டலெல்லாம் கூட பண்ணிருக்கேன். படிச்சு அறிவா வளர்ந்திரப் போகுதுன்னு. கவிதை, சிறுகதை, நாவல் மட்டுமே நான் வாசிக்க என்னை அது என் கற்பனையைக் தூண்டுது, என்னை கனவுகளக் கிளர்ச்சியடையச் செய்யுதுன்னு பெரிய வியாக்கியானம் எல்லாம் கூட பேசிருக்கேன். ஆனா எனக்கே இப்ப ஒரு கட்டத்துல புனைவு பெரிய சலிப்ப எனக்குள்ள உண்டாக்குது. வாழ்வின் தீராத அலைக்கழிப்புகளில் மனம் கிடந்து நோகும் சஞ்சலங்களைத் தான் படைப்பிலக்கியங்கள் மேலும் மேலும் நமக்குள்ள ஊட்டி நம்மையும் முடக்கிப் போடுதோன்னு தோண ஆரம்பிச்சிருக்கு.

அப்படியான ஒரு சமயத்துல தான் கீழடி குறித்த ஆய்வுகள் மக்கள் மயப்படுத்தப்பட்டதும் அதுசார்ந்த புத்தகங்கள் வெளிவரவும் தொடங்குச்சு. சு.வெங்கடேசனோட பேட்டிகளைத் தொடர்ச்சியாப் பார்க்குறதும் அவரொட கட்டுரைகளைப் படிக்கிறதும்னு ரொம்ப ஆர்வமா செஞ்சுட்டு இருந்தேன். கடந்த கண்காட்சில இந்தப் புத்தகம் வந்ததும் தமிழகத்தோட மொத்த தொல்லியல் இடங்களைப் பற்றியதுமான ஒரு அடிப்படை அறிவைப் பெறுவதற்கான புத்தகம்ங்குற விளம்பரத்தோட வெளிவந்தப்போ இது என்னை மிகவும் கவர்ந்துச்சு. கண்டிப்பா படிக்கனும்னு தோணுச்சு. இப்ப வாங்கவும் வச்சிருக்கு.

புத்தகத்துல நான் இன்னும் ஒரு பக்கம் கூட வாசிக்கல. இப்பத்தான் தொடங்க போறேன். ஆனாலும் இந்த புத்தகம் வாங்க தேடித் தேடிப் பார்த்த ஆர்வமும் கோவையிலேயே கிடைத்த மகிழ்வும் பெருசா இருக்கு. கண்டிப்பா என்னோட வாசிப்பை நிலைநிறுத்திக்க மிகப் பெரும் அனுபவமாவும் ஒரு மாற்றமாவும் இந்தப் புத்தகம் இருக்கும்னு நினைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.