ஒருவீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன்

மனிதனே ரொம்ப பழமையான உலோகம் தான். காலம் தான் அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்கிறார்கள். - ஜெயகாந்தன்

இந்த அனுபவ ஞானமே "ஒருவீடு பூட்டிக் கிடக்கிறது" என்ற ஜெயகாந்தனின் தேர்ந்தெடுத்த தொகுப்பான இந்த 17 கதைகளிலும் கதைசொல்லும் நீதியாக தெளிந்து நிற்கிறது.

இக்கதைகள் முன்வைக்கும் முற்போக்கு எழுதப்பட்டு வெளிவந்த காலம் திகைக்க வைக்கிறது. இன்றும் இக்கதைகளுக்குள்ளிருக்கும் பிரச்சினைகளுக்காக முன்வைக்கப்படும் விவாதங்களும் தீர்வுகளும் சற்றே புரட்சி மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் சமூக விதிகளை உடைத்து மானுடம் காக்கும் முயற்சிகளாகவே தோன்றுகிறது. நாம் அவைகளை காலமாற்றத்தின் காரணமாகவும் அறிவுப்புலத்தின் ஆக்கச் செயல்களாகவும் ஏற்றுக் கொள்ளலும் புரிந்துகொள்ளலும் நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளும் சிறுபணியாகும். ஏற்க மறுப்போமாயினும் நம் மனங்களின் நீங்காக் களைநீக்க ஜேகேயின் பேனா முயன்று கொண்டே இருக்கும். ஏனென்றால் அதுவே அவர் எழுத்தின் நோக்கம்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.