விதானத்துச் சித்திரம் - ரவி சுப்பிரமணியன்

இத்தொகுப்பின் கவிதைகள் விழிவழிப்படும் காதலை இந்த முறை விதிவழிப்படும் வாழ்வை புலம்பித் தீர்க்க வேண்டிப் பிரார்த்தனைக்கு வரும் பிரகாரத்துக்குள் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

தலைவனின் அகத்துடிப்பான காதலையும் காமத்தையும் நட்பையும் அழகியலையும் சுயமதிப்பீட்டையும் புறத்துடிப்பான சமூகக்கோபத்தையும் அரசியற் பிழைகளுக்கெதிரான தன் மறுப்பையும் என நீளும் எல்லாவற்றையும் கருகித் தாழும் திரிகளைத் தூண்டி விட்டுக் கொண்டும் மலரத் தொடங்கும் மலர்களை மண் கொள்ளும் முன் சேகரித்தெடுத்துப் படைத்துக் கொண்டும் சுருதி குழையும் தன் வீணையோடு விரல்களால் உரையாடிக்கொண்டும் தெப்பங்குளங்களில் உயிர்வாழும் சிறுமீன்கூட்டங்களுக்குப் பொரியுணவு வழங்கிக் கொண்டும் பிரகாரத்துக்குள் கவியும் மங்கிய ஒளி தன்மேல் விழுந்து ஒளிர ஒளிர மனம் மகிழ மகிழ அழகாகிக் கொண்டே இருக்கும் தலைவி தனதாக்கிக் கொள்ளும் கவின்கணங்களே இக்கவிதைகள்.

முதுமொழியின் பழைய வார்த்தைகளில் புதுக்களத்தில் பயின்று வரும் கவிதைகள் புதியதும் சுகமானதும் நெடுநாள் நினைவிலிருத்திக் கொள்ளும் வாசிப்பனுபவத்தை வழங்குகிறது.

Comments

Popular posts from this blog

எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்.