
நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குரூர் தமிழில் - கே.வி.ஜெயஸ்ரீ இரண்டு மிகப்பெரிய ஆச்சரியங்கள் இந்நாவல் வாசிக்கையில் ... ஒன்று தமிழரின் சங்ககால வாழ்வைப் பேசும் இந்த நாவலை இன்றைய மலையாளி ஒருவர் மலையாளத்தில் எழுதியிருக்கிறார். இராண்டாவது மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பென்று ஒருபோதும் நம்பிவிட முடியாததும் முதலில் மூலமாகத் தமிழிலேயே தான் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று நம்பும்படியாகவும் செய்திருக்கும் அற்புதமான மொழிமாற்றம். மன்னனைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்வு நடத்தும் பாணர் மற்றும் கூத்தர் குலத்தின் புலமையும் வறுமையும் ஒன்றுக்கொன்று இணைந்தே தொடரும் வாழ்வியலைச் சொல்ல ஒரு பாணர் குழுவின் இடப்பெயர்ச்சியில் தொடங்கும் கதை ஒரு குடும்பத்தில் மையம் கொண்டு அக்குடும்ப உறுப்பினர்களான தலைவன் - கொலும்பன், மகள்கள், மகன்கள் , நண்பர்கள் ஆகியோரின் அறிவு, புலமை, திறமை, காதல், களவு, துரோகம், வலி, ஏமாற்றம், கடைசியாக தப்பித்தலுக்கான வழியாக நாடுவிடுதலும் எதிர்பாரா மரணமும் என்று படர்ந்து பிரம்மாண்டமான வரலாற்றின் ஊடாகப் பல கிளைகளாக விரியும். மூவேந்தர்கள், அதியமான், நன்னன், வேள்பாரி போன்ற மன்னர்களின் கொடைத் ...