பூவரசம் வீடு - பாஸ்கர் சக்தி


 

ஒரு கிராமமும் அதில் ஒரு பெரிய குடும்பமும் அக்குடும்ப வாரிசோடு சேர்த்து 4 வேலையில்லாப் பட்டதாரிகளும் அவர்கட்குத் தலைமையேற்கும் மறைமுகக் களவாணியும் பெரிய குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு வீடும் அதற்கும் குடிவரும் மூன்று இளம் வேணிகளைக் கொண்ட அசலூர்க் குடும்பமும் பெரிய குடும்பத்து முன்னோரைத் தீர்த்ததுமில்லாமல் இன்றும் தொடர்கிறதென்ற அச்சத்தையூட்டி வரும் ஒரு இளம் பெண்ணின் சாபமென நான்கு தலைமுறைகளைத் தொடர்புறுத்தப் பாட்டி கூறுமொரு திரில்லிங்க் கதையும் இளம் வேணிகளுக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் இடையிலான காதல்களும் கால மாற்றங்களுக்குப் பலியாகும் கிராம எதார்த்தங்களும் தலைமுறை வித்தியாங்ககளற்றுத் தொடரும் களங்க மனங்களினால் விளையும் கண்ணீர் முடிவுகளுமென எளிமையான நடையில் இயல்பாகத் தொடங்கும் நாவல் புதையல் புதிர்களுடன் நீண்டு சில முடிவற்ற கேள்விகளுடன் வாசிக்கச் சுவாரஸ்யங்களுடன் நிறைவுற்றிருக்கிறது


Comments

Popular posts from this blog