ஒளி - சுசித்ரா


 



ஒளி கதையப் படித்து விட்டு ஊர்முழுக்க நீயும் படி , நீயும் படியென்று சொல்லி அந்த ஒரு கதைக்காகவே இந்தத் தொகுப்பை வாங்கி வாசிக்கையில் தொகுப்பில் இருக்கிற எல்லாக் கதையுமே நன்றாகவே இருக்கிறது.

பெண்களின் எழுத்தென்றாலே ஒரு வகைமாதிரிக்குள் அடைபட்டிருக்குமென்ற நினைப்பிலிருந்த எனக்கு இந்த தொகுப்பு மாறுபட்ட எண்ணங்களைக் கொடுத்திருக்கிறது. பால்யம் முதல் முதுமை வரையிலான மனிதர்களைக் கொண்டியங்கும் கதைகளில் ஒரு மழை நாள் போன்ற எதார்த்தம், தேள், நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருக்கின்றன போன்ற பேண்டசி, யாமத்தும் யாமே உளேன் போன்ற அறிவியல் கதைகள், ஊஞ்சல் போன்ற நினைவோடையுத்தி என்று மாறுபட்ட கதைக்களங்களும் தேர்ந்த எழுத்தும் மிகவும் புதுமையான அனுபவங்களைக் கொடுத்தது. சிறகதிர்வு கதை மரணம் சார்ந்த புதிர்களையும் அறிவியல் வெற்றிகளை ஏற்காத இயற்கையின் மறுதலிப்புகளையும் ஹைட்ரா கதை தோழிமார் அன்பையும் மாணவர் நலனில் பள்ளிகளின் பல்லிளிக்கும் பாதுகாப்பையும் லீலாவதியின் தத்துவங்கள் இயல்பான குடும்ப நிகழ்வுகளின் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் குழந்தை வளர்ப்பில் பெண்களுக்கு உள்ளுரத் தொடரும் அச்சத்தையும் பேசுகிறது.

ஒளி கதை வாசிக்காதவர்கள் வாசியுங்கள். லிங்க் கமெண்ட்டில் இருக்கிறது

Comments

Popular posts from this blog

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.