ஜார் ஒழிக - சாம்ராஜ்


 

சாம்ராஜ் அவர்களின் முந்தைய தொகுப்பாப "பட்டாளத்து வீடு"கொடுத்த நிறைவில் அடுத்த தொகுப்பு மிக ஆர்வமாக வாங்கி வாசித்தேன்.
வேகமான நடையில் எழுதப்பட்டதும் முன்பே சொல்லப்பட்டதுமான கதைகள் தான்.

மிகச் சிறிய சொற்றொடர்களில் எழுதி எழுதிச் சேர்த்த கதைகள் நம்மகிட்ட ஒரு ஆள் தலைப்புச் செய்தி வாசிக்கிற டோன்ல விவரிக்கிற மாதிரியே இருக்கிறது. அதனால் வாசிக்கும் போது நமக்கும் களம் விரைவாக உள்ளுணரப்பட்டு யதார்த்தமான காட்சியா விரிய ஆரம்பிச்சிடுது.

கதைகளில் குறையாகவும் அதுவே தெரிகிறது. நிதானமில்லாமல் வேகவேகமாகக் கதை சொல்லிவிட்டு ஓடுகிறாப்போல் இருப்பதால் நாம் கதையை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.

அப்புறம் ஜார் ஒழிக கதைய சம்பந்தப்பட்டவங்க இன்னும் பரவலா வாசிக்கல போல ... சாம்ராஜ் இன்னும் தடையவோ நாடுகடத்தலையோ சந்திக்காம இருக்காரே ...

இந்த வார்த்தையைச் சொல்வதற்கு நீங்கள் என்னை மன்னிக்கத்தான் வேண்டும் தோழர் கணேசன் அவர்களே ... "ஓம்லக்க" வாழ்க

Comments

Popular posts from this blog

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.