கனக துர்கா - பாஸ்கர் சக்தி
எனக்கு நெடுநாள் ஏக்கமாகவே ஒன்று தொடர்ந்து வருகிறதென்றால் அது 80 களில் இளமையைக் கழித்த வாழ்வு கிடைக்காமல் போனது பற்றித்தான். அந்தக் காலகட்ட மக்கள் எத்தனையோ போதாமைகளுக்கிடையிலும் வாழ்வை அத்தனை சுவாரஸ்யங்களுடனும் உயிர்ப்புடனும் வாழ்ந்திருக்கிறார்கள். கிராமங்களிலும் சற்றே வளர்ச்சியடைந்த குறு நகரங்களிலுமான வாழ்ந்த வாழ்வை முடிந்த மட்டும் நிம்மதியோடும் நிதானத்தோடுமே கடந்திருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தையும் அதில் இயங்கிய மனிதர்களின் நல்லது கெட்டதுகளை இந்தத் தொகுப்பின் எளிய கதைகளில் எந்த ஜோடிப்புகளுமின்றி இயல்பாகக் கொண்டு வந்திருக்கிறார் பாஸ்கர் சக்தி

Comments
Post a Comment