கல்லாப் பிழை - க மோகனரங்கன்


ஆழியில் ஆழ்ந்தும் 

ஊழியில் உழன்றும்

மாண்டது போகாமல்

மீண்டது தெளிந்து

ஊனுயிர் புதுக்கி

உள்ளொளி பெருக்கி

உலகளக்கும் முதுமொழிக்கு

அதற்கேயான

அமரத்துவம் ஒன்றுண்டு

தன்னையுருக்கித்

தமிழ்செய்வோர் தயவுடன்

மறுபடியும்

மறுபடியும்

புத்தணி பூணுமது

Comments

Popular posts from this blog

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்.

பிடிமண் - முத்துராசா குமார்

நூறு ரூபிள்கள் - மயிலன் சின்னப்பன்.