மிளகு - சந்திரா தங்கராஜ்


 

"தொடுதிரைக்கு உள்ளே குதிக்க வழியில்லை" என்று ஒரு வரி வருகிறது தொகுப்பில்...

ஆனால் இந்தக் காகிதக் கட்டுக்குள்ளிருந்து ....

"
ஜன்னல் வழியே ஒரு துண்டு நிலமெனத் தெரியும்" மலையையும்

"
அழகை அழகெனக் காணும் கண்களுக்காகக் காத்திருக்கும்" காட்டையும்,

"
எவர்வாழ்வுக்கும் தேவைப்படும் ஏதோ ஒன்றைக் குழைத்து வைத்திருக்கும்" பூக்களையும்,

"
கவனேற்றப்பட்ட கல்லில் முடித்துவைக்கப்பட்ட சொர்க்கத்தின் பாதையில் சயனித்திருந்த" பறவைகளையும்,

"
மலைக்குள் ஒளிந்துவிளையாடி எண்ணிக்கையின் போது கண்ணாமூச்சி காட்டும்" கால்நடைகளையும்

பால்யத்தில் களிக்கூட்டாகி நின்ற "சூரியனிருக்கும் போதே தோன்றிவிடும் நிலாவையும்",

"
தன் நிணத்தை அறுத்துக் கானவனின் உடல்செய்யும்" காதலையும்

"
தூதுப்பறவைகளைப் போல திரும்பி வரும் வழிகளை மறக்கடிச்செய்துவிட வேண்டிய" மரணத்தையும்

எல்லாவற்றிற்கும் மேலாக சொந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய நாளை அவர்கள் தேர்வுசெய்த அதிகாரத்தின் பூட்ஸ்கால்களே குறிப்பதையும்,

கண்கள் விரிய விரிய விந்தைக் காட்சிகளாக அந்தந்த இடங்களுக்கே கூட்டிப் போய்க் காட்டுகிறது கவிதை

Comments

Popular posts from this blog

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்.

பிடிமண் - முத்துராசா குமார்

நூறு ரூபிள்கள் - மயிலன் சின்னப்பன்.