நீ என்பது எனக்கு
தனித்து கரையில் அமர்ந்திருக்கும்
பசித்த உயிரை
இரை காட்டி அழைக்கும் தெப்பம்
நானோ
நீ தரும் மாமிசம் உண்டு
உயிர்த்திருக்குமுன் வளர்ப்பு விலங்கு
- ஸ்ரீசங்கர்
தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன். பாடம் நடத்தி விட்டுத் தேர்வு வைப்பது தான் வழக்கம் ஆனால் வாழ்க்கை மட்டும் தேர்வுகளின் மூலம்தான் பாடமே எடுக்கும் என்ற சொற்றொடருக்கு நீண்ட உரையாய் அமைந்ததே இந்த நாவல். தனிமனிதர்களுக்கு எந்த விருப்பு வெறுப்புமில்லாத ஒரு வாழ்க்கையைத் தான் குடும்ப அமைப்புகள் ஏற்படுத்தித் தருகிறதென்ற குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியிருக்கிற இந்தக் காலகட்டத்தில் இப்படியான கதைகள் மீண்டும் மீண்டும் அழுத்தி சொல்ல வருவது குடும்ப வாழ்வின் தேவையையும் பாதுகாப்பையுமே. உறவுகளின் பல்வகைப்பட்ட உணர்வுகள் நெருங்கி மோதி உருவாகும் நல்லது கெட்டதுகளை பிரித்தறிந்தோ விட்டுகொடுத்தோ ஏற்றுக்கொள்ளத் துணியும் போது சகல சௌக்கியம் பெற்ற ஒரு வாழ்வை அனைவருமே வாழ முடியும். ஆனால் அது அத்தனை எளிதல்ல என்பதையும் கசப்போடும் புரிதலோடும் ஒத்துக் கொள்ளவும் வேண்டும். தன் மானமே பெரிதென்ற போக்கில்லிருக்கும் ஒரு இளைஞன் தன் எதிர்காலத்துக்காகவும் தன் தம்பி தங்கைகள் நிறைந்த குடும்பத்தின் நல்வாழ்வுக்காகவும் ஊதியத்துக்கான ஒரு வேலையின்றியும் போதிய வயதின்றியும் இருக்கும் ஒரு சூழலிலும் "பெரும்போகமாய்" வலிய வரு...
லிலித்தும் ஆதாமும் - நவீனா பெண்ணியம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பெண்ணியம் என்பது "தன் பாலினத்தின் மீதான அன்பும் மற்ற பாலினத்தை மீதான புரிதலும் தான்" என்ற எளிய விளக்கத்தோடு தொகுப்பைத் தொடங்கியிருப்பதே மிகப் பெரிய ஆறுதலையும் வாசிப்பு ஊக்கத்தையும் அளித்தது. 23 தலைப்புகளில் பெண்,பெண்ணியம், பெண் உளவியல், பெண்சார்ந்த குடும்ப,சமூக,பொருளாதாரப் பார்வைகள், விமர்சனங்கள்,அடக்குமுறைகள் , பெண் உடல் குறித ்த தோற்ற மயக்கங்கள்,ஆண்-பெண் சகோதர உறவில்,திருமண பந்தத்தில், குழந்தைப் பேற்றில் உருவாகும் உடல்நிலைச் சிக்கல்கள், குழந்தையற்ற பெண்களின் மீது கொண்டவனும் குடும்பமும் சமூகமும் நடத்தும் கூட்டு வன்மங்கள், குழந்தை வளர்ப்பில், குடும்ப பராமரிப்பில், விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து அதில் பயணித்தல்களில்,தகுதிக்கேற் ற பணியைத் தேர்ந்தெடுத்தலில்,பணிக்குப ் போவதில், ஊதிய வேறுபாடுகளில்,சொத்துப் பகிர்வில் நிலவும் உரிமை மீறல்கள் என அனைத்து பாலின சமநிலையற்ற போக்குகள், இயற்கை உட்பட இந்த உலகின் அத்தனையும் பெண்ணுக்கெதிராகாக் காட்டும் கொடூர முகங்கள்,தெய்வ வழிபாடுகளில் பெண்ணுக்குச் சமயங்களின் ஒரவஞ்...
ஒரு பெருந்தொற்று பாவம் பார்த்து விட்டுப் போனதின் எச்ச மிச்சமாய்க் கிடக்கும் எனக்கு இதற்கு முன் எத்தனையோ முறை எதேதெற்கோ வீழ்ந்து துவண்ட போதெல்லாம் தன் " பக்கக்கரங்கள் " நீட்டி சுவீகரித்துக்காத்துக் கொண்டதைப் போல இனியும் வழக்கம் போல் புத்தகங்கள் தான் மறு உயிரளிக்கப் போகிறதென்ற முடிவிற்கு வந்த பின் கையிலெடுத்த முதல் புத்தகமே விதவிதமான கதைக்களங்களின் தேர்விலும் தேர்ந்த கதைகளுக்குத் தகுந்த மொழியும் எழுத்துமாகச் சேர்ந்து புத்துயிர்ப்பிலும் தெளியாத புதிர்ப்பாதையும் புராதன ரகசியங்களுக்குள் திறக்கும் புதியதொரு கதவையும் இன்னதென்றறியாத இளம்பிராயத்தின் இனியொருபோதும் திரும்பாத இனிமைகளையும் தோல்விகளுக்கு இடையில் பெறும் இடைவெளிகளையே ஆசுவாசமாய் எண்ணி வாழும் இன்னல்கள் நிறைந்த நடுத்தரக் கிராம மனங்கள் எதிர்கொள்ளும் குழப்பங்களையும் இழப்பையும் குடும்ப உறவுகளின் அன்பில் விளையும் நெருக்கத்தையும் அவர்கள் துயருறுகையில் அதைத்தடுக்கக் கைநீளாத இயலாமையில் துவளும் மனதையும் மதுமயக்கத்தில் சரிக்கும் தவறுக்குமான தராச...
Comments
Post a Comment