குற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி
ஒரு இலக்கியவாதியின் கையில் நாவல் வெறும் கதையல்ல. இந்த மனித குலத்தின் பரிணாம இயக்கத்தைப் பிரதிபலித்துக் காட்டும் தாஸ்தாவேஜுகளாகும்.
- அசோகமித்திரன்.
குற்றப்பரம்பரை வாசித்து முடித்த கையோடு மேற்கண்ட வாக்கியத்தை அசோகமித்திரன் கட்டுரையில் வாசித்தேன். எத்தனை உண்மையான வாசகம் என்று உணர்ந்தேன். ஒரு சட்டத்தால் அடிமைகளாக்கப்பட்ட குறிப்பிட்ட மக்களின் வாழ்வை கதையாக எழுதி ஆவணப்படுத்துகையில் அது காலங்கள் கடந்தாலும் எத்தனை பெரிய வரலாற்று ஆவணமாக உருமாறும் என்பதை நாவல் நிருபித்திருக்கிறது.
இதுவரை நாவல் 11,000 பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்திருக்கின்றவாம். அப்படி வாங்கி வாசித்த சக வாசகர்கள் அடைந்த பெரும் உணர்ச்சிப் பெருக்கும் சில போதாமைகளும் நானும் அடையப் பெற்றேன்.
Comments
Post a Comment