கனவுப் புத்தகம் - ஜெ.பி.சாணக்யா

கனவுப் புத்தகம் - ஜெ.பி.சாணக்யா காமத்தை எழுதுவது என்பது காமத்தைத் தூண்டுவது அல்ல, அது கலைஞனின் வேலை அல்ல. காமத்தை மானுடனின் முதன்மையான வெளிப்பாட்டுக்களங்களில் ஒன்று என்று காண்பவனே கலைஞன். - ஜெயமோகன். இந்தத் தொகுப்பு வாசிச்சிட்டு தான் எனக்கு முதல்முறையா ஒரு குழப்பம் வருது. இந்தக் கதைகளை பிடிச்சிருக்குன்னு நினைக்கவா ? ஏத்துக்க முடியலைன்னு நினைக்கவா ? மனித வாழ்வின் இருட்பக்கமாகவே இருந்தாலும் பெரும்பாலும் விரும்புவதும் அதே சமயம் துன்பப்பட வைப்பதுமான காமத்தை இயல்பென்று ஏற்றுக் கொள்வதா ? மீறலாய் வெளிப்படும் போது பொதுவெளியில் எவ்வாறு எடுத்துக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் படுமென்று யோசிப்பதா ? இதைப்போல நிறைய கேள்விகள் துளைக்கிறது. இக்கதைகளின் மாந்தர்கள் அசலா போலியா என்ற தராசின் முள் நம்முடைய முகமூடிகளுக்குள்ளிருக்கும் மனதுக்குள்ளேயே நிறுத்துப் பார்க்கக் கோருகிறது. வாசிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறதென்ற மேம்போக்கான வரிகளில் இத் தொகுப்பின் சில கதைகளைக் கடக்க முடியவில்லை. நான் கண்டும் கேட்டிராத வாழ்வின் இருட்பக்கச் சித்திரங்களின் மேல் வெளிச்சமென்ற அதிர்வுகளைப் பாய்ச்சுகிறதாகவே கருதுகிறேன். கவிதைத்தொனியில் அமைந்த விவரணைகள் கனவுதளத்திற்கு அழைத்துச் செல்லும் வாசிப்பை அளிக்கிறது.

Comments

Popular posts from this blog

கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.