கெடைகாடு - ஏக்நாத்.
கெடைகாடு - ஏக்நாத்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரான போஸ்பாண்டி, கோடி, மாப்பிள்ளை நண்பர் , சீப்பு வைத்து சீவாத ஏ.ஆர். ரஹ்மான் காமெடிக்காரர், ஜெர்மனியில் முறுக்குச் சுடுபவரின் மாமா என எல்லாருமாகச் சேர்ந்து மாடுமேய்க்கக் காட்டுக்குள் சென்று சில நாட்கள் தங்கியிருக்க சிவனாண்டியும் கூட்டுக்கைகளான அந்த நாலு பேரும் ஊருக்குள் வரும் பஞ்சாயத்துகளைப் பார்த்துக் கொண்டிருக்க ஏழரை மூக்கன் பொம்பளைகளிடம் அத்துமீறி அடிவாங்கி ஊரவிட்டு ஓட என சம்பவங்கள் ஒரே கதையாக நீண்டால் எப்படி இருக்குமென நக்கலும் நையாண்டியுமாக கண்முன்னே கொண்டு வந்து அனுபவிக்க வைக்கிறது நாவல் ... வர்ணனைகளற்ற அசலான பழைய கிராமத்து வாழ்வியலை எழுத்தில் வாசிப்பது இதுவே முதல் முறை.
ஒரு காட்சியை விவரிக்கும்போதே அக்காட்சிக்குள் நாமும் ஒருவர் அல்லது நாமும் ஒரு மூலையில் நின்று அக்காட்சியை வேடிக்கை பார்க்கிறோம் என்று நினைக்க வைக்கிற எழுத்து எப்போமே தனி சுகமும் பெரு வெற்றியும் தான். வாசகனுக்கும் எழுத்தாளருக்குமிடையே புத்தகமென்ற அச்சிட்ட பிரதியின் இடைவெளியைக் குறைப்பதுதான் தேர்ந்த எழுத்தின் அடிப்படை. அதை இந்த நாவல் சிறப்பாக அணுகியிருக்கிறது.
"எப்போதுமே எழுத்தை ஆஸ்பித்திரி சுத்தத்தோடே ஆராயாதீர்கள். அதிலிருக்கும் ரத்தமும் சதையுமான மனிதர்களின் உணர்வுகளை உணரத் தொடங்குகள்" என்ற சுஜாதாவின் மேற்கோளை ஞாபகப்படுத்துகிறது நாவல்.
என்னங்க அதுக்குள்ள முடிச்சிட்டீங்க !?! இன்னும் கொஞ்சம் எழுதிருக்கலாம்னு தோணவச்ச ஒரு நாவல் ...
Comments
Post a Comment