பயணம் - அரவிந்தன்
பயணம் - அரவிந்தன்
எதிர்பார்ப்புகளின் சுமை நம்மோட புரிந்துகொள்ளும் அறிவின் கதவை அழுத்திகிட்டு இருக்கு. அந்தக் கதவு மூடியிருக்கிற வரைக்கும் கண்ணும் காதும் திறந்திருந்தாலும் பிரயோஜனம் இருக்காது.
- அரவிந்தன்.
இந்த இரண்டு வரிகள் தான் ராமனாதன் என்ற இளைஞனின் வாழ்க்கைப் பயணமா 400 பக்கத்துக்கு விரிஞ்சிருக்கு.
" நெருப்பு சுடும்" என்று முன்முடிவுடனே நெருப்பைப் பயன்படுத்தாமாலேயே பதறி விலகி ஓடிய ஒருவன் நெருப்பைத் தெளிவாகக் கவனமாகப் பயன்படுத்தினால் சுகமும் தரும் என்பதைத் தெரிந்து கொண்ட பயணத்தை அறியமுடியாத பல கேள்விகளோடு தொடங்கி பல விவாதங்கள் எழுப்பப்பட்டு சுயமாக விழுந்துவிட்ட பல சுழல்களில் மீண்டு புரிதல்களில் சங்கமிக்கும் அனுபவப்பூர்வமான பதில்களோடு முடித்து வைத்திருக்கிறார்.
வலிந்து திணிக்கப்படும் குடும்பச் சுமை, விவேகமில்லா இளமை, கட்டுக்கடங்காத காமம், தேவைகளை விடவும் விதிகளைக் கடைப்பிடிக்கக் கோரும் ஆன்மீகம், அடிபணியச் செய்யும் ஆசிரமக் கட்டுப்பாடுகள், கட்டுப்பாடுகளைக் கடந்தேனும் மக்களுக்கு மாற்றங்களைக் கொடுத்துவிடத் துடிக்கும் தூய சேவைமனப்பான்மை, மதம் குறித்த மக்கள் அறியாமை, அதைப் பயன்படுத்தும் அரசியல் நிறுவனங்களின் சூது, உடலும் உள்ளமும் இணையும் யோகக்கலை மற்றும் ஆசனங்களின் பயிற்சியின் தேவையும் பயனும் என்று நீண்டு எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனின் மகிழ்வானதும் அமைதியானதுமான வாழ்வுக்குத் தேவைப்படும் மனமுதிர்ச்சியை அடைவதற்கு வேண்டிய பண்படுதல்கள் என்று தொடர்ச்சியாக மாறுபாடுகளுக்கு உட்படும் நிறைய தளங்களில் நாவலின் கதை கேள்விகளை எழுப்பிக் கொண்டும் தன்னைத்தானே சுயமதிப்பீட்டுக்கு உள்ளாக்கிக் கொண்டும் பயணித்து ஒரு நிறைவான கணத்தில் முடிவடைந்திருக்கிறது
Comments
Post a Comment