நாஞ்சில் நாடன் -நாவல்கள்
கடந்த 2019 டிசம்பர் முழுக்க பெருமாள் முருகனோடு கழிந்த மாதிரி இந்த டிசம்பர் முழுக்க நாஞ்சில் நாடனோடு கழிந்திருக்கிறது.
கிராமத்தில் ஊன்றிய வேரும் பம்பாயில் பரப்பிய கிளையுமாக வட்டார மொழியிலும் அனுபவப் பட்டறிவோடும் விரிந்த இவரது எழுத்துக்கள் சமூகத்தின் மீது கொண்டிருக்கும் அன்பும் ஆற்றாமையும் கலந்த விமர்சனமாகவே நான் கருதுகிறேன். எளிய மனிதர்களின் எளிய வாழ்வுத் தேவைகளுக்கான அலைபாய்ச்சல்களையே ஆறு நாவல்களிலும் எழுதியிருக்கிறார். வேலைவாய்ப்பின்மையால் வாழ்விழந்த இளைஞர் பட்டாளத்தின் மனக்குமுறல்களையும் வறுமையையும் அதற்கான இடம்பெயர்வுகளையும் அதனைத் தீர்த்துவிடத் துணியாத அரசியலாளர்களின் மீதெழும் கோபக் கனல்களின் பிரதிநிதியாகவே தமது எழுத்தை முன்னிறுத்தியிருக்கிறார்.
குடும்ப உறவுகளுக்குள்ளான விருப்பு வெறுப்புகளையும் பலதரப்பட்ட சமூக பொருளாதார நிலைகளில் வாழும் பெண்களின் பல்வேறான மனவெழுச்சிகளையும் பூச்சுகளோ புரட்சிக் கவசங்களோ இல்லாமல் இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலும் சாதிய ஒட்டுப் பெயர்களையே பயன்படுத்தி கதாபாத்திரங்களை வடிவமைத்த்திருந்தாலும் தனக்குள்ளிருக்கும் முற்போக்கையே நிலை நிறுத்த விரும்புகிறார்.
ஆறு நாவல்களில் பிடித்த நாவல் எது என்பதை தனிமைப்படுத்திவிட முடியாத அளவுக்கு அனைத்து நாவல்களுமே ஏதொ ஒரு நிறைவைக் கொடுக்கிறது.
சிறுகதைகள் சாலப்பரிந்து தொகுப்பு வாசித்திருக்கிறேன். மீதமிருக்கும் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டும்.
Comments
Post a Comment