பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா ஆறும் அருவியுமா அட்டகாசமா ஆரம்பிச்சு பக்கத்துக்குப் பக்கம் திருப்பங்களுடன் நீண்ட நாவலை முதல்ல ஏத்துக்கக் கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. காதல், நம்பிக்கை,வாக்கு அப்படின்னு எதையும் மதிக்காம எப்படி இப்படி இலகுவாக முடிவுகள் மனிதர்களால் எடுக்கப்படுதுன்னு கோபமா வந்துச்சு. எதிலும் ஸ்திரத்தன்மையற்ற மனிதர்களின் ஆசைக்குப் பலியான இளைஞனா ரகுவோட வாழ்க்கை கேள்விக்குறியான திகிலோட முதல்பாகம் முடிஞ்சு இரண்டாம் பாகம் ஒரு மாதிரியான முன்முடிவோட தான் படிக்கத் துவங்கினேன். ஆனா வாத்தியார் தன்னோட அமெரிக்கப் பயணச் சித்திரத்த நாவலுக்குள்ள கொண்டுவந்துட்டாரோன்னு நினைக்க வைக்கிற அளவுக்கு வீதிவீதியா அமெரிக்காவச் சுத்திக் காட்டிட்டு இரண்டாம் இன்னிங்கிஸின் பிட்ஸ்பர்க் பினிஷரா ரத்னாவைக் கொண்டு வந்தப்பத்தான் மீண்டும் வேகம் கூடுச்சு. ஆனாலும் திடீர்னு மதுமிதா இறந்துட்டதா சொல்ற காட்சில எதிர்பாராம கண்ல தண்ணி வந்துருச்சு. அப்பத்தான் மதுவோட இயலாமை பெருசா பாதிச்சது. வயது வந்தும் நாடு மாறியும் மழலைமாறாத தேவதையா ஒரு இளம்பெண் அநியாயமாப் பலியான அதிர்ச்சி நீங்கவே இல்ல இன்னும். கிட்டத்த 40 வருசமா நாவலை வாசிச்ச அத்தனை ரகுவும் சொல்லிருப்பாங்க .. இன்னைக்கு நானும் சொல்றேன் ... I Miss you மது ... ❤️. வேறு எவராலும் எழுதிவிடமுடியாத நடை, வாக்கியங்கள், சொற்தேர்வுகள்னு நாற்பதாண்டுகள் கழித்தும் காதலும் காதல் சார்ந்த கணிணிக் களமுமாக அத்தனை இளமையா இருக்கு நாவல். ( ஒரே பெரிய குறை - இத்தனை எழுத்துப் பிழையோட ஒரு புத்தகம் நான் படிச்சதேயில்லை)

Comments

Popular posts from this blog

கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.