பட்டாளத்து வீடு - சாம்ராஜ்
கிண்டிலில் வாசித்த முதல் புத்தகம் ...
வாசிப்பை சிறுகதைகளுக்கு நேர்ந்துவிட்ட வருடத்தில் எதிர்பாராமல் கிடைத்த சுவாரஸ்யமும் சுவையும் நிரம்பிய கதைக்கொத்து. கதைகளின் வேண்டுதலுக்கேற்ப விதவிதமானதும் துல்லியமானதுமான காட்சி விவரிப்புகளுடன் கச்சிதமான நகர்த்துகளும் இணையும் போது கதைகள் மனம் நிறைக்கும். பெரும் சோகத்தையும் வலியையும் இழப்பையுமே முடிவாகக் கொண்டிருந்தாலும் அனைத்துக் கதைகளுக்குள்ளும் மனிதமும் அன்பும் மற்ற ஜீவிகளுக்கான கருணையும் அழுத்தமாக பதிந்திருக்கிறது. களி என்ற கதை இன்னும் பெருமளவு நீண்டும் ஆழ்ந்தும் ஒரு நாவலாகவே வெளிப்பட்டிருக்க வேண்டுமென்ற ஆசையை உள்ளூர உண்டாக்கியது. அனைத்துக் கதைகளுமே பக்க அளவில் சிறுத்திருந்தாலும் வாசித்துப் நெடும் நேரத்திற்கு பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது.
கவிஞர் சாம்ராஜ் அவர்களே நிறைய எழுதுங்கள் ப்ளீஸ்
Comments
Post a Comment