கன்னிவாடி - க.சீ.சிவகுமார்.
கன்னிவாடி - க.சீ.சிவகுமார்.
"காலத்தாற் குன்றாது
கருவறை அடைக்காத்த வெப்பம்" என்ற சிவக்குமார் அவர்களின் வாக்கியத்திற்கு ஏற்பவே ஒரு டிவிஎஸ் - 50 யில் அவரின் பின்னாலமர்ந்து காலையிலிருந்து இரவு வரை தாராபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் - வயல்வெளிகளுக்குள்ளாகவும் முருங்கைமரங்களுக்குள்ளாகவும், சந்தைகளிலும் சாவடிகளிலும் சாலைகளிலும் சாராயக் கடைகளிலும் கல்லூரிகளிலும் அவர் கைகாட்டிப் பார்க்கச் செய்த மனிதர்களின் வெளி வறண்டு போனாலும் உள்ளூர ஓடும் அன்பின், காதலின், வறுமையின், கோபத்தின், இழப்பின், வலியின், வைராக்கியத்தின், ஏமாற்றத்தின், இயலாமையின், வேலையின்மையின், மழையின்மையின், என இப்படி நீளும் அனைத்துமான உள ஈரத்தைக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்த உணர்வைத் தருகிறது சுகமும் சுவாரஸ்யமானதுமான கதைகளும் எழுத்தும்
Comments
Post a Comment