வீடென்ப-தேவிபாரதி
வீடென்ப தொகுதியின் முன்னுரையில் தேவிபாரதி பின்வருமாறு குறிப்பிடுகிறார் ...
" யாராவது ஒரு வாசகர் இருபதாண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய சிறுகதையை வாசித்து விட்டு இன்றைக்கும் அதைப் பற்றிப் பகிர்கிறார், எனைக்காணும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது நெருங்கி நின்று என்கைகளை மிருதுவாகப் பற்றிக் கொள்கிறார்."
அவர் குறிப்பிட்ட அந்த வாசகர் இன்றைக்கு நான் தான்.
தொடங்கி வளர்ந்து முடியும் வரை உள்ளூர ஒரு சீரான அதிர்வையும் தீவிரத்தையும் உணர்த்தி வாசிக்க வாசிக்க பித்துப் பிடிக்கச் செய்துவிடும் எழுத்தைக் கொண்ட கதைகள் நிறைந்த இரு தொகுப்புகளையும் வாசித்து முடித்ததும் இத்தனை நன்றாக எழுதுபவர்கள் ஏன் நிறைய எழுதுவதில்லை என்ற விடையற்ற கேள்வி எனக்கும் தோன்றாமலில்லை
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்- மயிலன் ஜி சின்னப்பன் காரணம் தெரியாத மரணமொன்றின் பலியாய் மறைந்த ஆளின் கதையொன்று எங்கள் வீட்டிலும் இருக்கிறது. நேற்றைக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கழிந்த அவனின் மரணக்காரணம் இன்றைக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேலைக்குப் போன இடத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டானென்ற முதல் தொலைபேசி எனக்குத்தான் வந்தது. உயர் சிகிச்சைக்கு வேண்டி (உயிர் இருக்கிறதா என்றறியாத மர்மங்களுடன்) தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றும் செய்தி எனக்குத்தான் முதலில் சொல்லப்பட்டது. எத்தனையோ முயன்று பார்த்து விட்டோமென்றும் நாங்கள் அளிக்கும் மருத்துவத்தை அவனது உடல் ஏற்க மறுத்துவிட்டது என்ற பூடக மொழியில் ஆள் செத்துப் போய்விட்டானென்ற துக்கச்செய்தியும் அரசு மருத்துவமனையில் 8 மணி நேரக் காத்திருப்புக்குப் பின் முதன் முதலாக எனக்குத்தான் சொல்லப்பட்டது. பொட்டலமாய்க் கிடைத்தவனை குழிக்குள் இறக்கி வைத்து கடைசியாக முகம் பார்ப்பவர்கள் என்ற வரிசையில் முதல் ஆளாக நின்றதும் நான் தான். ஆனால் அவனின் மரணம் ஒருபோதும் தற்கொலையல்ல என்ற தீர்க்கமான முன்முடிவுட...
Comments
Post a Comment