சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
தமிழில் - கே.வி.ஷைலஜா

வாழ்ந்து மட்டுமே கற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது வாழ்க்கை.

- பாலச்ச்சந்திரன் சுள்ளிகாடு

கடந்து வந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால் ...
குறைவின்றிக் குழந்தமையை அனுபவித்ததும்,
பெற்றோரைப் பெருமிதப்படுத்தியதும்,
கற்பித்தோரைப் கௌரவப்படுத்தியதும்,
நினைத்தது நடந்துவிட்ட உணர்ச்சிகரமானதும்,
இருப்பதைக் கொண்டு மனம் நிறைந்ததும்,
இல்லாமைகளின் போது சுயம் அழிந்ததும்,
முடிந்துவிடக் கூடாதென்று வேண்டியதும்,
இப்படியே இருக்கும் என்று நம்பியதும்,
தோற்றுப் போய் கையறுநிலையில் நின்றதும்,
நம்பியவர்களைத் துரோகித்ததும், அடுத்தவருக்குப் பயனுள்ளதும்,
உடனிருப்பவரை மகிழச் செய்ததும்,
குறைந்தது நமக்காவது திருப்தியுள்ளதுமான எத்தனையோ நிகழ்வுகளோடு வாழ்ந்திருப்போமென்று அறத்தின் தராசில் எதிர்காலத்தை நடுவில் முள்ளாய் நிறுத்தி நல்லது கெட்டதுகளை நிறுத்துப் பார்க்கச் செய்கிறதிருக்கிறது இந்தத் தொகுப்பு.

அன்பினால் என்னை வழி நடத்தியவர்களையும் நான் செய்த பாவங்களால் நொறுங்கிப் போனவர்களையும் ஒரு சேர நினைத்துக் கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.