பொசல் - கவிதா சொர்ணவல்லி

நிறைய காதல்
நிறைய கனவுகள்
விரும்பாத் திருப்பங்கள்
முடிவாகக் கண்ணீர்
அழகான அம்மாக்கள்
அன்பான ஆச்சிகள்
உரிமையான உறவுகள்
உன்னதமான ஊர்
தரம் பிரிக்கும் சாதி
தலைகேட்கும் வீராப்புகள்
காக்கும் கடவுள்கள்
சாகசம் காட்டும் மாயசக்திகள்
கைகொடுக்கும் நம்பிக்கைகள்
காலமாற்ற மனப்பான்மைகள்

என ஒரே அமர்வில் வாசித்து முடித்துவிடகூடிய எளிய மொழியிலான 10 கதைகள்.

நெருங்கிய உறவுகள் மட்டும் சூழ ஒரு சிறு கூட்டிற்குள்ளிருந்து கல்வி, வேலை என்ற சிறகுகள் விரிய மனமின்றி நகரம் நாடிவந்த பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் மேற்கண்ட நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கும் பார்வையைத் தொடராகப் படித்ததைப் போன்ற உணர்வு.

ஒரு பயணத்தில் வாசிக்க வாய்த்தால் சுகம்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.