சாஅய் - கோ. சாமானியன்.

எது கவிதை ? என்ற கேள்விக்கு எல்லோரிடமும் ஒரு பதிலிருக்க உள்ளதன் நுணுக்கப்பார்வையே கவிதையென தான் கண்டதன் கருவைத் தன் நுட்பமான வார்த்தைகளால் கவிதைகளாக மாற்றிக் காண்பித்திருக்கிறார் கவிஞர்.

இவையெல்லாம் வார்த்தைகளாக மாற்றப்பட்டிருக்கிறதே என்ற வியப்புதான் இந்தக் கவிதைகளை தொடர்ந்து படிக்க வைக்கிறது.

சகமனித அன்பின் அவசியங்களையும் உறவுகளின் உன்னதங்களை, இயற்கையின் மீதான தன் இணக்கங்களையும் சமூக மனவளர்ச்சிகளையும் அதே நேரம் அதன் வீழ்ச்சிகளையும் அதிகார, சுரண்டும்,பொறுப்பற்ற மனிதர்களுக்கெதிரான இயலாமைகளையும் நிராரிக்கப்பட்டவர்களின் ஒடுங்கிய குரலையும் பிரசார நெடிகளைந்து அதன் தர்க்கப் பார்வையைப் பேசும் இந்தத் தொகுப்பு ஏதோ ஒரு பிரிவுக்குள் அடங்காமல் இருப்பது நல்லது. காதல் இல்லாமலிருப்பதும் மிக நல்லது.

சில டெம்ளேட் கவிதைகளுடன் இருந்தாலும் அதன் சுவாரசியமான மாற்றுப் பார்வையாலும் முன்னும் பின்னுமாகப் பாயும் கவிதையின் பொருளமைப்புக்கேற்ற சொற்கட்டுமானத்தாலும் புதிய வாசிப்பனுபவத்தைத் தருகிறது தொகுப்பு.

இடப்பெயர்ச்சி, நிலைக்கண்ணாடி என்ற கவிதைகள் அதன் நுட்பத்திற்காக மிகவும் பிடித்தமானதாக இருந்தது.

'மரணமொரு மாமிருகம்" கவிதை உலகின் நிலையாமையின் மீதான மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.

என் வாசகத்தேர்வளவில் ஒரு சின்ன குறை - வியப்பு நிறைவாகவும் நெகிழ்ச்சி குறைவாகவும் உள்ள தொகுப்பாக இது அமைந்திருந்தது.

கடைசியாக தொகுப்பின் பெயர் விளக்கம் ஆச்சர்யமூட்டுகிறது.

Comments

Popular posts from this blog