வெட்டாட்டம் - ஷான் கருப்புசாமி...

இந்தப்பதிவு நாவல் கோட்பாடுகள் பற்றிய எந்த முன்னறிவும் பல நாவல்களைப் படித்து இலக்கிய அனுபவமும் இன்றி ஒரு சாதாரண எழுதப் படிக்கத் தெரிந்த ஒருவன் ஒரு நீளமான கதையை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு அந்த கதையின் பாதிப்பு குறைவதற்கு முன் அதைப்பற்றி எதையாவது எழுதிவிடவேண்டுமென்ற ஒரு பேரார்வத்தால் எழுதியது.
ஒரு சிறு ஆறுதலுடன் தொடங்குகிறேன். நாம் ஆசைப்பட்டோ பிறர் பரிந்துரையை ஏற்றோ காசு கொடுத்து வாங்கி வந்து நம்மால் படிக்க நேரமில்லாமலோ அல்லது படிக்க கடினமாகவோ இருக்கிறதென்று நாம் அலமாரியில் அடுக்கி வைத்திருக்கும் எத்தனையோ புத்தகங்களுக்கு ஏற்படும் ஒரு விருப்பமில்லாத நிலை இந்த புத்தகத்து உண்மையாகவே ஏற்படாது.
சிறுது ஆவலும் நேரமும் வாய்க்கும்போது வாசிக்கத் தொடங்கி விட்டால் பின் நாவல் முடியும் வரை வாசித்துமுடித்துவிட்டுத்தான் வைப்பீர்களென்பது உறுதி. அந்த அளவுக்கு மிக விறுவிறுப்பான ஒரு கதைக்களம். உடனே படித்து விடலாம்.
தமிழகத்தின் கடந்த 10 மாதங்களின் அரசியல் நிகழ்வுகளையும் மற்றும் அதுசார்ந்து ஓட்டுப் போட்டோம் என்ற ஒரே ஒரு தவறை மட்டுமே செய்த மக்களாகிய நாம் சந்தித்த துர் நாட்களையும் திரும்பிப் பார்த்த உணர்வு தோன்றுகிறது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு முடிச்சு இடவோ அவிழ்க்கவோ முடிந்திருக்கிறது. தாய விளையாட்டின் விதிகளை நாவலின் போக்கிற்கேற்ப அத்தியாயத்தின் முன்பகுதியிலேயே அறிமுகப்படுத்துவது போன்று அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
நாமெல்லாம் வேண்டாமென்று வெறுத்து ஒதுக்குகிற தகுதியில்லாத, தற்பெருமை பேசியலைகிற, தன்னலத்தை விரும்புகிற, தாளாத பொருளை அனைத்து விதமான சட்ட விரோத செயல்களிலுன் கெட்ட வழிகளிலும், அப்பாவி மக்களை ஏமாற்றி வயிற்றிலடித்து சம்பாதித்து விட்ட, தள்ளாடும் தலைமை பீடங்களுக்கு துடிப்பான இளமையான தேர்ந்த கல்வியும்தொழில்நுட்ப அறிவும் சூழ்நிலைக் கேட்ப சமரசமற்ற முடிவுகளை எடுத்து நாட்டுமக்களின் நலம் காக்க வளம் காக்கவும் வருண் போன்ற மாற்றங்களை மக்கள் கனவாகவே கண்டு வருகின்றனர்.
ஒரு அரசியல் கதையை அதற்கே உரிய பல சுவாரஸ்யங்களுடனும் சூழ்ச்சிகளுடனேயும் அரசியல் சாக்கடையென்பது ஆள்பவரின் மனமே என்பதை கூறியுள்ளார்.
வருணின் கதாபாத்திரம் இளம் தலைமுறையின் மேல் நாம் வைக்க வேண்டிய நம்பிக்கையையே பிரதிபலிக்கிறது. இத்தனை தீவிர கதையில் நர்மதாவும் சுவாதியும், கயல்விழியும் இதம்.
மகேந்திரன் போன்றவொரு விவேகமான துணை இந்தத் தலைமுறைக்கு அவசியம் பக்கபலமே.
கதையில் நடக்கும் நவீன கணினித் தொழில் நுட்பம் சார்ந்த செயல்களெல்லாம் கொஞ்சம் புரிந்தது. எடுத்துச் சொல்லும் அறிவில்லையெனக்கு.
கதையின் முடிவு சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. நிஜத்தில் நடப்பதைப் போலவே கதையும் நம்மை ஏமாற்றவே செய்யுமென நான் நினைத்திருந்தேன்.
வினோதன் போன்றோரும் அவருக்கு அடிவருடிகளாக செயல்படுவோரும் எந்நாளும் வீழ்த்தபடவேண்டியவர்களே...
நாவல் சினிமாவுக்கு தேர்ந்தெடுக்கப்படலாம்.
இதன் நிறைகள் என்று நிறைய இருக்கிறது.
எனக்குச் சில கேள்விகள் அல்லது சில தோன்றல்கள்
(முட்டாள்தனமானதாய் இருந்தால் மன்னிக்கவும்).
1. இந்த கதையில் அழகுணர்வு எதிர்பார்த்து அதில் இல்லையென்று ஏமாந்தால் தகுமா?
2.இத்தனை விறுவிறுப்பை உண்டாக்கிய கதை இரண்டாம் வாசிப்புக்கு உட்படுமா?
3. பரபரப்பாக பேசப்பட்டாலும் கிளாசிக்கல் என்ற இடத்தை அடையுமா?
4. ஒருவேளை இந்த நாவல் உங்கள் கவிதைகளைப் போல உயிருடன் இல்லையெனவே நான் நினைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்.

பிடிமண் - முத்துராசா குமார்

நூறு ரூபிள்கள் - மயிலன் சின்னப்பன்.