Posts

இருமுனை - தூயன்

Image
  எப்போதுமே ஒரு கதையின் களம் பழையதோ புதியதோ ஆனால் அது சொல்லப்படுகிற விதத்திலும் மொழியிலும் இதுவரை சொல்லாத மயக்கத்தை வரித்துக் கொண்டு தன்னைத் தானே வேறொன்றாக மாற்றிக் கொள்ள விழையும் . இந்தத் தொகுப்பின் கதைகள் இதுவரை சொல்லப்படாத கதைகளில்லையென்றாலும் கதைசொல்லும் பாங்கிலிருக்கும் நிதானமும் எழுதியிருக்கும் மொழியிலிருக்கும் புதுமையும் மிகவும் கவர்கிறது . காரணம் ஒரே ஒரு சொற்றொடர் கூட க்ளிஷேவாக இல்லை . திரும்ப வாசித்து மகிழச் செய்யும் புதிய புதிய விவரணைகளில் வாசிக்கும் போது கதைகள் நமக்கு புதிய அனுபவங்களைக் கொடுக்கிறது . வாசித்த 7 கதைகளுமே விடாது துரத்தும் வாழ்க்கைப் பாடுகளிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் போது ஆட்படுகிற அதீத மனவெழுச்சிகளுக்குள் அலைக்கழியும் மாந்தர்களைப் பற்றிய கதைகளே . இன்னொருவன் பஞ்சம் பிழைக்க மாநில எல்லைகளும் மனித மாண்புகளும் கடந்து வந்து பணிபுரியும் வடமாநிலத்தவரின் சுகதுக்கங்களை போதிய புரிதல்களோடு நாம் அணுகவும் உடலுழைப்பாளர்கள் என்ற மலின வெளித்தோற்றத்திலிருந்து அவர்கட்கும் மனமென்...

கல்லாப் பிழை - க மோகனரங்கன்

Image
ஆழியில் ஆழ்ந்தும்   ஊழியில் உழன்றும் மாண்டது போகாமல் மீண்டது தெளிந்து ஊனுயிர் புதுக்கி உள்ளொளி பெருக்கி உலகளக்கும் முதுமொழிக்கு அதற்கேயான அமரத்துவம் ஒன்றுண்டு தன்னையுருக்கித் தமிழ்செய்வோர் தயவுடன் மறுபடியும் மறுபடியும் புத்தணி பூணுமது

பூவரசம் வீடு - பாஸ்கர் சக்தி

Image
  ஒரு கிராமமும் அதில் ஒரு பெரிய குடும்பமும் அக்குடும்ப வாரிசோடு சேர்த்து 4 வேலையில்லாப் பட்டதாரிகளும் அவர்கட்குத் தலைமையேற்கும் மறைமுகக் களவாணியும் பெரிய குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு வீடும் அதற்கும் குடிவரும் மூன்று இளம் வேணிகளைக் கொண்ட அசலூர்க் குடும்பமும் பெரிய குடும்பத்து முன்னோரைத் தீர்த்ததுமில்லாமல் இன்றும் தொடர்கிறதென்ற அச்சத்தையூட்டி வரும் ஒரு இளம் பெண்ணின் சாபமென நான்கு தலைமுறைகளைத் தொடர்புறுத்தப் பாட்டி கூறுமொரு திரில்லிங்க் கதையும் இளம் வேணிகளுக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் இடையிலான காதல்களும் கால மாற்றங்களுக்குப் பலியாகும் கிராம எதார்த்தங்களும் தலைமுறை வித்தியாங்ககளற்றுத் தொடரும் களங்க மனங்களினால் விளையும் கண்ணீர் முடிவுகளுமென எளிமையான நடையில் இயல்பாகத் தொடங்கும் நாவல் புதையல் புதிர்களுடன் நீண்டு சில முடிவற்ற கேள்விகளுடன் வாசிக்கச் சுவாரஸ்யங்களுடன் நிறைவுற்றிருக்கிறது