நூறு ரூபிள்கள் - மயிலன் சின்னப்பன்.
ஒரு பெருந்தொற்று பாவம் பார்த்து விட்டுப் போனதின் எச்ச மிச்சமாய்க் கிடக்கும் எனக்கு இதற்கு முன் எத்தனையோ முறை எதேதெற்கோ வீழ்ந்து துவண்ட போதெல்லாம் தன் " பக்கக்கரங்கள் " நீட்டி சுவீகரித்துக்காத்துக் கொண்டதைப் போல இனியும் வழக்கம் போல் புத்தகங்கள் தான் மறு உயிரளிக்கப் போகிறதென்ற முடிவிற்கு வந்த பின் கையிலெடுத்த முதல் புத்தகமே விதவிதமான கதைக்களங்களின் தேர்விலும் தேர்ந்த கதைகளுக்குத் தகுந்த மொழியும் எழுத்துமாகச் சேர்ந்து புத்துயிர்ப்பிலும் தெளியாத புதிர்ப்பாதையும் புராதன ரகசியங்களுக்குள் திறக்கும் புதியதொரு கதவையும் இன்னதென்றறியாத இளம்பிராயத்தின் இனியொருபோதும் திரும்பாத இனிமைகளையும் தோல்விகளுக்கு இடையில் பெறும் இடைவெளிகளையே ஆசுவாசமாய் எண்ணி வாழும் இன்னல்கள் நிறைந்த நடுத்தரக் கிராம மனங்கள் எதிர்கொள்ளும் குழப்பங்களையும் இழப்பையும் குடும்ப உறவுகளின் அன்பில் விளையும் நெருக்கத்தையும் அவர்கள் துயருறுகையில் அதைத்தடுக்கக் கைநீளாத இயலாமையில் துவளும் மனதையும் மதுமயக்கத்தில் சரிக்கும் தவறுக்குமான தராச...