
கசாக்கின் இதிகாசம் - ஓ.வி.விஜயன். தமிழில் - யூமா வாசுகி ஒரு கிராமத்தின் கதை கிராமத்து மக்களின் கதை ஒரு கதையை இத்தனை உயிரோட்டமாகச் சொல்லிவிட முடியுமாவென்ற வியப்புடனே தான் படிச்சுமுடித்தேன். கதைசொல்லலில் கி.ரா.வை நியாபகப்படுத்திக் கொண்டேன். ரவி என்ற ஒரு இளைஞன் ஆசிரியராகப் பொறுப்பேற்கும் கசாக் என்ற கிராமத்தில் வசிக்கும் சாதாரண மக்களின் இன்பதுன்பங்கள் நிறைந்த வாழ்க்கையப் இதிகாசமாகப் பதிவு செய்திருக்கிறார் திரு. ஓ.வி.விஜயன். இந்நாவலின் முக்கியச் சிறப்பாகப் போற்றப்படுவது இதன் பேச்சு வழக்கு மொழிநடை, ஒட்டுமொத்த கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் கொஞ்சமேனும் தொட்டு சென்றது. இதிகாசம் என்ற பெயரைத் தேர்ந்தது எத்தனை அர்த்தமானதென்று நாவல் முடியும் தருவாயில் நம் மனம் கனக்கும் நிகழ்வுகளிலிருந்து விளங்கப் பெறலாம். தன் தந்தையின் இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட மீறலுறவில் மனம் கலங்கி வீட்டைவிட்டுப் புறப்பட்டு ரவி கசாக்கிற்கு ஓராசியர் பள்ளியைத் துவங்கி நடத்த வருகிறார். அங்கு ஏற்கனவே இருக்கும் முகமதிய வேத பாட சாலைக்கும் ஒரு தனியார் ஆங்கிலவழிப் பள்ளிக்கும் இந்த ஓராசியர் பள்ளி ஒரு வருமானப் பிரச்சினையாக உருவெ...